3வது டெஸ்டில் ஜோ ரூட் சாதனை சதம்.. ஸ்மித், டிராவிட் சாதனை முறியடிப்பு.. பும்ராவும் புதிய உச்சம்

0
119

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் தன்னுடைய 37 வது சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி  அதிரடி ஆட்டத்தை விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் மெதுவான டெஸ்ட் இன்னிங்ஸ் போல் ஆடினார்கள். தொடக்க வீரராக பென் டக்கட் 23 ரன்களிலும், ஜாக் கிராலி 18 ரன்களிலும் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

ஜோ ரூட் சாதனை:

இந்த சூழலில் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஆலி போப் ஆகியோர் 109 ரன்களை சேர்த்தனர். 99 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம் தொடங்கியதும் 37 வது சதத்தை பூர்த்தி செய்து இருக்கின்றார்.

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் டாப் 5 இடத்தை பிடித்துள்ளார். ராகுல் டிராவிட்,ஸ்மித் ஆகியோர் 36 சதம் அடித்த நிலையில் ஜோ ரூட் தற்போது அதனை முறியடித்து இருக்கின்றார். இந்த நிலையில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்து பலமான நிலையில் இருந்தது.

- Advertisement -

பும்ரா ஹாட்ரிக் சாதனை மிஸ்:

அப்போது பும்ரா அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். ஸ்டோக்ஸ் 44 ரன்களிலும், ரூட்  104 ரன்களிலும்,கிரிஸ் ஒக்ஸ் டக்கவுட் ஆகியும் ஆட்டமிழந்தனர்.  ஆட்டத்தின் 87 ஆவது ஓவரில் முதல் இரண்டு விக்கெட்டுகளை பும்பர கைப்பற்றினார்.

இதையும் படிங்க: இது பாஸ்பால் இல்ல பிராங்க் பால்.. இந்தியா இதுல எச்சரிக்கையா இல்லனா மாட்டிக்கும் – அஸ்வின் கருத்து

ஹாட்ரிக் சாதனைகள் படைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பும்ரா அதனை தவற விட்டார். இதனால் இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட கிரிக்கெட்டில் பும்ரா 450 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -