சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளராக சாதனை படைத்திருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தன்னால் சமாளிக்க முடியாத இந்திய பேட்ஸ்மேன் யார்? என்பது குறித்து கூறி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளும் பொழுது தற்காலத்தில் மிகச் சிறந்த வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரையும் பந்துவீச்சாளர்கள் குறிப்பிடுவது வழக்கம். மேலும் இவர்களுக்கு எதிராக பந்து வீசுவது தங்களுக்கு கடினமாக இருந்தது என்று கூறுவார்கள். ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேறு ஒரு இந்திய பேட்ஸ்மேனை இவ்வாறு கூறியிருக்கிறார்.
விராட் கோலி – சச்சின் இப்படித்தான்
இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசும்பொழுது “சச்சினை விட விராட் கோலி வித்தியாசமானவர். அவர் எப்பொழுதும் உணர்ச்சிகரமாக இருக்கக்கூடியவர். சச்சின் மிகவும் மென்மையான பழக்கவழக்கங்களைக் கொண்டவர். ஆனால் விராட் கோலி ஆக்ரோஷமாக இருப்பதை தன் சட்டையில் குத்திக் கொண்டு வருபவர். எனவே அவருக்கு எதிராக எனக்கு களத்தில் நிறைய வாய் சண்டைகள் ஏற்பட்டு இருக்கிறது”
“அதே சமயத்தில் இந்தியாவில் சச்சினை கடவுள் போல பார்த்தார்கள். அவர் ஆட்டம் இழந்தால் மைதானத்தை விட்டு ரசிகர்கள் வெளியேறுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் விராட் கோலி அந்த அளவிற்கு ஆரம்ப நிலையில் அச்சுறுத்தலாக இருந்தது கிடையாது. ஆனால் போகப் போக விராட் கோலி சச்சினின் இடத்திற்கு வந்துவிட்டார்”
இவர்தான் எனக்கு சிரமம்
“எப்பொழுதும் ஒரு இன்னிங்ஸில் தொடக்கத்தில் ஒரு பேட்ஸ்மேன் நிலை நிலை நிறுத்திக் கொள்வதற்கு நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். எனக்கு இப்படியான நேரம் எடுத்துக் கொள்ளும் பேட்ஸ்மேன்களைத்தான் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நாம் பந்துவீச்சில் செட்டில் ஆவதற்கும் டைம் இருக்கும். இதனால் அவர்களை அவுட் செய்ய நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்”
இதையும் படிங்க : டிஎன்பிஎல்-ல் அஸ்வின் கெமிக்கல வச்சி மோசமான அந்த தப்ப பண்றாரு.. மதுரை அணி குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?
“இப்படியான பேட்ஸ்மேன்கள் உங்களை பெரிய அளவில் பாதிப்படைய வைக்க மாட்டார்கள். ஆனால் முதல் பந்தில் இருந்து அடிக்கும் வீரேந்தர் சேவாக் போன்றவர்களுக்கு எதிராக போராடுவது எனக்கு கடினமாக இருந்தது. உடனடியாக தாக்கி விளையாட விரும்பும் ஒரு வருடம் நாம் செட்டில் ஆக முடியாது. அமைதியான பேட்டர்களுக்கு எதிராக செட்டில் ஆவதைதான் நான் விரும்பினேன்” என்று கூறியிருக்கிறார்.






