எப்போது ஓய்வு ? ஜேம்ஸ் ஆன்டர்சன் விராட் கோலியைக் குறிப்பிட்டு சூசக தகவல் !

0
375
James Anderson and Virat Kohli

இன்னும் இரண்டு வாரங்களில் நாற்பது வயதை முடித்துக்கொள்ள இருக்கும், ஸ்விங் கிங் என்று அழைக்கப்படும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் லவக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சனை அதிசயம் என்றே கூறலாம்!

இங்கிலாந்தின் கவுன்டி அணியான லங்காசைர் அணியிலிருந்து இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட்டிற்குள் வந்தவர் ஜேம்ஸ் ஆன்டர்சன். இங்கிலாந்து அணிக்காக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2002ஆம் ஆண்டு அறிமுகமான ஜேம்ஸ் ஆன்டர்சன், இருபது வருடங்களாக சர்வதேச போட்டிகளில் ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஓடிக்கொண்டிருப்பது சாதாரண விசயமல்ல!

- Advertisement -

கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு பேட்ஸ்மேன். சுழற்பந்து வீச்சாளர், விக்கெட் கீப்பரை விட அதிக உழைப்பையும், உடற்சக்தியையும் தரவேண்டிய இடத்தில் இருப்பது வேகப்பந்து வீச்சாளர்கள்தான். உடற்தகுதியை எப்பொழுதும் அதிக உயரத்தில் வைத்திருக்க வேண்டும். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் என்றாலே காயம் என்பது அவர்களது விளையாட்டு வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே தொடரக்கூடியது. இதையெல்லாம் தாண்டி நாற்பது வயதில் ஒரு சர்வதேச அணியின் டெஸ்ட் போட்டிக்கான முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பது என்பது ஆச்சரியம்தான்!

ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக முதன் முதலில் மே மாதம் 2003 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேற்கு எதிராக அறிமுகம் ஆனார். இதுவரை 172 டெஸ்ட் போட்டிகளில் 320 இன்னிங்களில் 657 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆவ்ரேஜ் 26.37, எகானமி 2.8. சச்சினுக்கு அடுத்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது ஜேம்ஸ் ஆன்டர்சன்தான் என்பது குறிப்பிடத்தக்கது!

நாற்பது வயதை முடிக்கவிருக்கிற ஜேம்ஸ் ஆன்டர்சன் தனது ஓய்வு குறித்துக் கூறும்பொழுது, விராட் கோலிக்கு பந்துவீசுவது தனக்கு விருப்பமான ஒன்று என்றும், அதனால் இங்கிலாந்து அடுத்து இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்யும்போது, அந்த அணியில் தானும் இடம்பெற வேண்டுமென்று விரும்புவதாகவும், தனது ஓய்வு குறித்துச் சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -