ஜெய்ஸ்வால் அதிகபட்ச ரன்.. 35 ரன்களை தொடாத இந்திய பேட்ஸ்மேன்கள்.. இங்கிலாந்து அணி சமாளிப்பு

0
610
Jaiswal

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள ஒய்எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் துவங்கி நடைபெறுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மிகப் பொறுமையான இன்னிங்ஸ் விளையாடி 14(41) என வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த சுப்மன் கில் சுழற் பந்துவீச்சில் அதிரடியாக விளையாடி, இறுதியில் ஆண்டர்சன் பந்துவீச்சில் தவறான ஷாட் ஆடி 34(46) ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதே போல் இதற்கு அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 27 (59), ரஜத் பட்டிதார் 32(72), அக்சர் படேல் 27(51), கேஎஸ்பரத் 17(23) எனக்கு கிடைத்த தொடக்கத்தை வீணடித்து வெளியேறினார்கள்.

இந்த போட்டியில் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய ஜெய்ஸ்வால் முதல் செசன் முடிவின்போது அரைசதத்தை கடந்தார். இதற்கு அடுத்து இரண்டாவது செசன் முடிவில் அற்புதமாக விளையாடி உள்நாட்டில் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்தார்.

- Advertisement -

மூன்றாவது செசனில் விக்கெட் சரிவை மனதில் வைத்து சரியான முறையில் விளையாடிய அவர் 150 ரன்களை கடந்து, இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இன்றைய ஆட்ட நேர முடிவில் 257 பந்துகளில் 17 மற்றும் 5 சிக்ஸர்களுடன் 179 ரன்கள் குவித்திருக்கிறார். ஜெயஸ்வால் தன்னுடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிகபட்ச ரன்னை தற்பொழுது பதிவு செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் பேட்டிங்கில் ஜெய்ஸ்வாலை கழித்துவிட்டு பார்த்தால், ஒட்டுமொத்த இந்திய பேட்டிங் யூனிட்டும், அனுபவம் இல்லாத இங்கிலாந்து பௌலிங் யூனிட் முன்னால் மிகவும் மோசமாக விளையாடி இருக்கிறது. அதிகபட்சமாக கில் எடுத்த 34 ரன்கள்தான் இரண்டாவது அதிகபட்ச ரன்னாக இருக்கிறது.

இதையும் படிங்க : AUSvsWI ODI.. 37 ஓவரில் முடிவு.. வெஸ்ட் இண்டீஸ் புதிய தொடக்கம்.. வார்னர் இடத்துக்கு பரிசோதனை

இந்திய சூழ்நிலையில், பந்துவீச்சுக்கு பெரிதும் சாதகம் இல்லாத நிலைமையில், அனுபவம் இல்லாத பந்துவீச்சு குழுவிடம் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மிக மோசமாக செயல்பட்டு இருக்கிறது என்றே கூறலாம்.