“2023 உலக கோப்பை இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இருக்க மாட்டார்” – அடித்துச் சொல்லும் இந்திய முன்னாள் வீரர்!

0
2152
Jaiswal

தற்பொழுது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது.

இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அயர்லாந்து செல்ல வேண்டி உள்ளது. இதற்கு அடுத்து இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை பயிற்சியாக அமையக்கூடிய ஆசிய கோப்பையில் விளையாட இருக்கிறது. இதற்கு அடுத்து உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாட வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இதை முடித்துக் கொண்டு இந்திய அணி நேராக இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் விளையாடுகிறது. இந்த உலகக் கோப்பைத் தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் மாதம் வரையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகக் கோப்பை துவங்கும் காலக்கட்டத்தில் சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்க இருக்கிறது. இதில் இருக்கட்டும் சேர்க்கப்பட்ட இருப்பதால் இந்திய தரப்பிலிருந்து ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் அணிகள் அனுப்பப்படுகின்றன. அறிவிக்கப்பட்டுள்ள ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு ருத்ராஜ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த அணியில் ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, சிவம் துபே போன்றவர்கள் இடம்பெற்ற இருக்கிறார்கள்.

தற்பொழுது இதை வைத்துப் பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” ஜெய்ஸ்வால் இந்தப் பையன் தனது அறிமுக டெஸ்டில் சதம் அடித்திருக்கிறார். இது மிகவும் அழகான ஒரு சூழ்நிலை. இவரை ஒருநாள் கிரிக்கெட் இந்தியா அணிக்கான பட்டியலில் வைக்கவில்லை. இதனால்தான் இவரது பெயர் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறது.

- Advertisement -

இவர் தற்போது ஒருநாள் இந்திய அணிக்கான வாய்ப்பின் ரேசில் இல்லை. இவர் ஆசிய கோப்பை மற்றும் இந்தியாவில் நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பையில் இல்லாமல் போகலாம். ஆனால் அடுத்த எட்டு பத்து மாதங்களில் இவர் இந்தியாவுக்காக மூன்று வடிவ கிரிக்கெட் அணியிலும் இடம் பெற்று விளையாடுவார் என்பது உறுதி.

ராகுல் திரிபாதி பெயர் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இல்லை. அவருக்கு ஐபிஎல் தொடர் சரியாக இல்லை என்றாலும் இப்பொழுது அவரை தேர்வு செய்திருப்பது சரியானது. ஏனென்றால் அவர் இதற்கு முன்பு வரை இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். சாதாரண ஐபிஎல்காக அவரை மறந்து விட்டால் நீங்கள் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள திலக் வர்மா பெயர் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெற்று இருப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இறுதியாக ரிங்கு சிங்கும் இந்திய அணிக்குள் வந்துள்ளார். இதுதான் முன்பு மிகப்பெரிய விவாத பொருளாக இருந்தது. ஐபிஎல் தொடரில் இருந்து சிவம் துபே மீண்டும் இந்திய அணிக்குள் வந்திருக்கிறார். இது எல்லாம் மகிழ்ச்சியான விஷயம்!” என்று கூறியிருக்கிறார்!