நம்பர் 3ல் இறங்குவேன் என அடம்பிடிக்கும் சுப்மன் கில்.. ஜெய்ஸ்வால் நாளை பிளேயிங் லெவனில் இருக்கிறார்! – இந்திய அணியில் நிகழும் பரபரப்பு!

0
1261

ஜெய்ஸ்வால் நாளை பிளேயிங் லெவனில் இருக்கிறார். சுப்மன் கில் தனக்கு ஓபனிங் வேண்டாம் என்று ராகுல் டிராவிட் இடம் கூறுகின்றார். இந்த தகவல்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார் ரோகித் சர்மா.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தீவுகளுக்கு சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. மூன்று வித போட்டிகளுக்குமான இந்திய அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் சென்றுவிட்டது.

- Advertisement -

டெஸ்ட் அணியில் ருத்துராஜ், ஜெய்ஸ்வால், முகேஷ் குமார் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. விராட் கோலி ரோஹித் சர்மா ஜடேஜா அஸ்வின் போன்ற மூத்த வீரர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.

மற்றொரு மூத்த வீரர் சித்தேஸ்வர் புஜாரா இம்முறை டெஸ்ட் அணியில் எடுக்கப்படவில்லை. அதேநேரம் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறதா? இல்லை புறக்கணிக்கப்பட்டு வருகிறாரா? என்று தற்போது வரை தகவல்கள் தெரியவில்லை. அந்த இடத்தில் ஜெய்ஸ்வால் விளையாட வைக்கப்பட உள்ளார் என்கிற தகவல்கள் வந்திருக்கின்றன.

போட்டிக்கு முந்தைய நாள் பேட்டியளித்த ரோகித் சர்மா பிளேயிங் லெவன் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது:

- Advertisement -

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தொடர்ந்து இரண்டு முறை தோல்வி அடைந்துவிட்டோம். இருப்பினும் பைனல் வரை வந்திருப்பதை குறைத்து எடை போடாமல் அதற்கு மதிப்பளிக்கிறோம்.

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளை வெற்றியுடன் துவங்குவோம் என்று நம்புகிறேன். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு இதுதான் சரியான தருணம். ஜெய்ஸ்வால் கட்டாயம் பிளேயிங் லெவனில் இருக்கிறார்.

அதே நேரம் ஓப்பனிங்கில் நன்றாக விளையாடி வரும் சுப்மன் கில் தன்னை மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் இறக்கிவிடும்படி ராகுல் டிராவிட்டிடம் முறையிட்டிருந்தார். ‘என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும்பாலான போட்டிகளில் அந்த இடத்தில் இறங்கி நிறைய ரன்களை அடித்திருப்பதாகவும், கூடுதல் நம்பிக்கை அந்த இடத்தில் இறங்கினால் எனக்கு கிடைக்கும். மேலும் அதிக ஸ்கோர் அடிப்பேன்.’ என்றும் கூறியுள்ளார்.

சில பரிசோதனைகளை ஆரம்ப கட்டத்திலேயே செய்து பார்ப்பதை நல்லதென யோசிக்கிறேன். அவரை எந்த இடத்தில் களமிறக்க வேண்டும் என்பதைப் பற்றி பின்னர் சிந்திக்க உள்ளேன்.” என்று ரோகித் சர்மா பகிர்ந்துகொண்டார்.