இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்பில் நான்காவது நாளில் இன்று இருக்கிறது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்கள் எடுத்தது. இது அணி தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது.
இதை எடுத்து இந்திய அணிக்கு நான்காவது இன்னிங்ஸில் 192 ரன்கள் இலக்கு இங்கிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்டது. இலக்கு குறைவாக இருந்தாலும் பொறுப்பாக விளையாட வேண்டிய அவசியம் ஆடுகளத்தின் காரணமாக இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று எட்டு ஓவர்கள் விளையாடிய இந்திய அணி மொத்தம் 40 ரன்கள் எடுத்து, குறிப்பாக விக்கெட்டை கொடுக்காமல் வெளியே வந்தது. இதற்கு காரணமாக இந்திய அணியின் வெற்றி சதவீதம் மிகவும் அதிகரித்தது.
நேற்றைய நாளின் முடிவுக்கு முன்னால் ஜெய்ஸ்வால் இடம் ரோஹித் சர்மா பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். கடைசி ஓவரை அட்டாக் செய்ய வேண்டாம் என்று கூறினார். ஜெய்ஸ்வால் அதன்படியே தடுத்து விளையாடி ஆட்டம் இழக்காமல் வெளியே வந்தார்.
மேலும் நேற்றைய நாளில் வெளியேறும் பொழுது ரோகித் சர்மா தன் பேச்சைக் கேட்டு ஜெய்ஸ்வால் விளையாடியதற்கு மகிழ்ச்சி தெரிவித்தபடி வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஆட்டம் துவங்கி ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். மேலும் அவர் ஜெய்ஸ்வாலிடம் “அவர்களே எல்லாம் செய்யட்டும். நாம் பெரிதாக எதையும் செய்ய வேண்டாம். மேலும் நான் அடித்து விளையாடும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறேன்” என்பதாக பேசியிருந்தார்.
ஜெய்ஸ்வால் இடம் ரோஹித் சர்மா இதைச் சொல்லிய அடுத்த ஓவரில் ஜோ ரூட் வீசிய முதல் பந்திலேயே பெரிய ஷாரட் அடிக்க ஆசைப்பட்டு ஜெய்ஸ்வால் ஆண்டர்சன் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : “துருவ் ஜுரல் நேத்து என்னென்ன செஞ்சார் தெரியுமா? மிரண்டுட்டேன்” – மைக்கேல் வாகன் பேட்டி
இதனால் ரோகித் சர்மா களத்தில் மிகவும் கோபமாகவும் ஏமாற்றமாகவும் காணப்பட்டார். எப்படியும் மதிய உணவு இடைவேளை நேரத்தில் இதுகுறித்து அவர் ஜெய்ஸ்வால் இடம் பேசுவார் என்பது தெரிகிறது.