“துருவ் ஜுரல் நேத்து என்னென்ன செஞ்சார் தெரியுமா? மிரண்டுட்டேன்” – மைக்கேல் வாகன் பேட்டி

0
1428
Jurel

தற்பொழுது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் முதல் செசன் வரையில், போட்டி இங்கிலாந்து அணியின் கைகளில் இருந்தது போலவே தெரிந்தது.

ஆனாலும் கூட போட்டி முழுமையாக இங்கிலாந்து அணியின் கைகளில் இல்லை. காரணம் இங்கிலாந்து அணியால் மிகப்பெரிய முன்னிலையை எடுக்க முடியாமல் துருவ் ஜுரல் தன்னுடைய போராட்டம் மிகுந்த பேட்டிங் மூலம் செய்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் திரும்ப வந்த இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு இங்கிலாந்து அணியை 145 ரன்களில் சுருட்டினார்கள்.

இந்திய பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடன் சிறப்பாக செயல்படுவதற்கு முதல் இன்னிங்ஸில் துருவ் ஜுரல் வெளிப்படுத்திய மிகச் சிறப்பான பேட்டிங்தான் முக்கிய காரணமாக அமைந்தது.

அவரது பேட்டிங் டெக்னிக் பற்றி பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும் பொழுது “நான் எப்பொழுதும் இளம் வீரர்களை தான் பார்ப்பேன். எல்லா வீரர்களிடமும் அட்டாக்கிங் பேட்டிங்தான் இருக்கும். டி20 கிரிக்கெட் முறையில் பந்தை பார்த்து அடிப்பார்கள். ஆனால் நான் டெக்னிக் எப்படி இருக்கிறது என்று பார்ப்பேன்.

- Advertisement -

உங்களிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணிக்கு எதிராக பேட்டிங் டெக்னிக் இல்லை என்றால் நீண்ட நேரம் களத்தில் நின்று பெரிய ரன்கள் அடிக்க முடியாது. துருவ் ஜுரல் பேட்டிங் டெக்னிக் மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர் மிகவும் வலிமையான பேட்டிங் டெக்னிக் வைத்திருக்கிறார்.

அவருடைய பேட் இன்னிங்ஸின் இரண்டாவது பகுதியில் பெரிய ஷாட்கள் விளையாடும் பொழுது பந்தை தரையிலும், இறங்கி வந்து பேட்ஸ்மேன்களின் தலைக்கு மேலும் அடித்தார். மேலும் எங்க கேப் இருக்கிறதோ அங்கு பார்த்து அடித்தார். இவ்வளவு அழுத்தம் மிகுந்த ஆட்டத்தில் அவர் செய்வதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

இதையும் படிங்க : 14 பவுண்டரி.. 6 சிக்ஸ்.. சிஎஸ்கே 8.40 கோடிக்கு வாங்கிய 20 வயது வீரர் அதிரடி.. குட்டி ரெய்னா

நேற்று காலை இந்தியா பேட்டிங் செய்ய வந்த பொழுது அவர்கள் போட்டியை வெல்லக்கூடிய அணியாக இல்லை. ஆனால் துருவ் ஜுரல் குல்தீப்பை வைத்துக்கொண்டு படிப்படியாக இந்தியாவை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார். மேலும் அழகாக விளையாடினார்” என்று கூறியிருக்கிறார்.