கில் திலக் வர்மாவின் 2 விக்கெட்டை எடுத்த ஜெய்ஸ்வால்.. வினோதமான சம்பவம்!

0
747
Gill

சூரியகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்க நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி மழையால் நடைபெறாமல் போக, இரண்டாவது போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று தொடரின் மிக முக்கியமான மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி தற்பொழுது வாண்டரஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் மட்டுமே தொடரை காப்பாற்ற முடியும்.

இந்த போட்டிக்கான டாசை தென் ஆப்பிரிக்கா வென்று முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. சூரியகுமார் யாதவ் கேப்டனாக தொடர்ச்சியாக ஆறாவது முறையாக டாசை தற்போது இழந்திருக்கிறார்.

இந்திய அணியில் இந்த போட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக வந்தார்கள். முதல் ஓவரில் கில் 3 பவுண்டரிகள் அடிக்க 14 ரன்கள் வந்தது.

- Advertisement -

இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் ஜெயஸ்வால் அடிக்க 15 ரன்கள் வந்தது. இதனால் இந்திய அணி இரண்டு ஓவர்கள் முடிவில் விக்கெட் இழக்காமல் 29 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் மூன்றாவது ஓவருக்கு கேப்டன் மார்க்ரம் அதிரடியாக சுழற் பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜை கொண்டு வந்தார். அந்த ஓவரை சந்தித்த கில் பந்தை மடக்கி அடிக்க போக, பந்து பேடில் பட்டது. தென் ஆப்பிரிக்கா அணி நடுவரிடம் முறையீடு செய்ய அவர் எல்பிடபிள்யு அவுட் கொடுத்தார்.

இதை அடுத்து டிஆர்எஸ் போகலாமா வேண்டாமா? என கில் ஜெய்ஸ்வால் இடம் கேட்க, அவர் வேண்டாம் என்று தடுத்து கில்லை ஃபெவிலியன் அனுப்பிவிட்டார். அடுத்து வந்த திலக் வர்மா முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார்.

பின்பு கில் விக்கெட்டை மறுஒளிபரப்பில் பார்த்த பொழுது, பேடில் பட்ட பந்து ஸ்டெம்ப்பை தாக்காமல் நகர்ந்து சென்றது தெளிவாகத் தெரிந்தது. ஜெய்ஸ்வால் கணிப்பால் கில் பரிதாபமாக தனது விக்கெட்டை இழந்தார். மேலும் அவரது விக்கெட் விழுந்த காரணத்தினால் உள்ளே வந்த திலக் வர்மாவும் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்தார். இந்த நிகழ்வுகளுக்கு தெரியாமலே ஜெய்ஸ்வால் காரணமாக அமைந்துவிட்டார் என்பது வினோதமானது!