இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தனக்கு ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் எந்த அளவிற்கு உதவியாக இருந்தார்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் ஜெய்ஸ்வால் முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அப்பொழுது இந்திய தொடக்க ஆட்டக்காரராகவும் கேப்டனாகவும் ரோகித் சர்மா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் வெளியே அடித்தேன்
இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொழுது நடைபெற்ற சம்பவத்தை குறிப்பிட்டு, ரோகித் சர்மா தனக்கு எவ்வாறெல்லாம் உதவியாக இருந்து வந்தார் என்பது குறித்து ஜெய்ஸ்வால் மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். மேலும் அவர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 16 பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 171 ரன் குவித்தார்.
இதுகுறித்து ஜெய்ஸ்வால் பேசும்பொழுது ” ஜடேஜா பாய் வந்து வீசிக்கொண்டிருந்த பொழுது நான் இறங்கி வந்து ஒரு பந்தை ஸ்டேடியத்துக்கு வெளியே சிக்சர் அடித்தேன். உடனே ரோகித் சர்மா என்னிடம் வந்து ‘ஜெய்ஸ் இப்படியா அடிப்பது? அமைதியாக தரையில் வைத்து பந்தை விளையாடு’ என்று சொன்னார். அதற்குப் பிறகு நான் சாதாரணமாக விளையாட ஆரம்பித்தேன்”
15 நாட்களுக்கு முன்பே சொன்னார்
“மேலும் நான் அறிமுகமாகும் போட்டிக்கு முந்தைய நாளில் நான் விளையாடுவேன் என அவர் சொல்லவில்லை. அவர் என்னிடம் போட்டிக்கு 15 நாட்கள் இருக்கும்பொழுதே சொல்லிவிட்டார். மேலும் இந்த காலகட்டத்தில் நாம் இருவரும் சேர்ந்து போட்டிக்கு தயாராகும் என்று சொல்லி என்னுடன் இணைந்து தயார்படுத்தினார்”
இதையும் படிங்க : எங்களை என்னென்னமோ விமர்சித்தாங்க.. அத தாண்டி நாங்க ஜெயிக்க இதுதான் காரணம் – பென் ஸ்டோக்ஸ் பேச்சு
“மேலும் அவர் என்னை சுதந்திரமாக விளையாட சொன்னார். என்னுடைய ஷார்டுகளை நம்பிக்கையுடன் விளையாடச் சொன்னார். நான் செட்டில் ஆகிவிட்டால் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று சொன்னார். இப்படி என்னிடம் பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். எனக்கு மிக உதவியாக இருந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






