எங்களை என்னென்னமோ விமர்சித்தாங்க.. அத தாண்டி நாங்க ஜெயிக்க இதுதான் காரணம் – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

0
181
Stokes

தற்போது நடைபெற்று வரும் ஆசஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி கம்பேக் கொடுத்து ஆஸ்திரேலியா அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டி நடைபெற்ற மெல்போன் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 152 ரன் எடுக்க இங்கிலாந்து 110 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 132 ரன்னில் சுருண்டது. இதைத்தொடர்ந்து 175 இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து ஆறு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

வரலாற்று வெற்றி

கடந்த 14 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறாமல் இருந்து வந்தது. குறிப்பாக நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் ஆஸ்திரேலியாவில் இதுவரை ஒரு டெஸ்ட் வெற்றியை கூட பெற்றதில்லை என்கின்ற சோகமான சூழ்நிலை இருந்தது.

இத்துடன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளையும் தோற்று இங்கிலாந்து டெஸ்ட் தொடரை ஏற்கனவே இழந்திருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்தது. வீரர்கள் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்தார்கள் என்றும் கூறப்பட்டது. தற்போது விமர்சனங்களை தாண்டி இங்கிலாந்து வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

எங்கள் திட்டம் இதுதான்

இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் பேசும் பொழுது “எங்களுக்கு இந்த வெற்றி மிகவும் முக்கியமானதாக மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் 170 ரன்கள் இலக்கை எடுப்பது என்பது கடினம் என்று எங்களுக்கு தெரியும். பந்துவீச்சாளர்களுக்கு எப்போதும் ஏதாவது ஒரு உதவி இருந்து கொண்டே இருந்தது. எனவே நாங்கள் ஆஸ்திரேலிய பவுலர்களை செட்டில் ஆக விடக்கூடாது என்று முடிவு செய்தோம். அவர்களைத் தொடர்ந்து கடினமான லென்த்தில் வீசவைக்க நினைத்தோம்”

இதையும் படிங்க : 14 வருடங்கள்.. 2 நாளில் முடிந்த 4வது டெஸ்ட்.. இங்கிலாந்து கம்பேக் வெற்றி.. ஆஸி பாக்ஸிங் டேவில் தோற்றது

“நாங்கள் சரியான கண்ட்ரோல் உடன் அட்டாக் பண்ணி விளையாட முடிவு செய்தோம். மேலும் பெரிய தோல்விகளுக்கு பிறகு எங்களுடைய வீரர்கள் திரும்பி வந்து இப்படி ஒரு போட்டியில் விளையாடும் வென்று இருப்பது அவர்களுடைய குணத்தை காட்டுகிறது. இதற்காக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழு அனைவரையும் பாராட்டுகிறேன். இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -