இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சதம் அடித்து இந்திய அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
இந்திய அணி நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் 52 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. இந்த நிலையில் போட்டியின் மூன்றாவது நாளில் இன்று இந்திய அணி தொடர்ந்து ரன் குவித்து வருகிறது.
ஆகாஷ் தீப் அசத்தல்
நேற்று சாய் சுதர்சன் விக்கெட் இழந்த பிறகு நைட் வாட்ச்மேன் ஆக களம் இறங்கிய ஆகாஷ் தீப் என்று தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். மொத்தம் 94 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் இந்த ஜோடி 150 பந்துகளில் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
இதைத்தொடர்ந்து சுப்மன் கில் 11 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால் ஒரு மனையில் நிலைத்து நின்று விளையாடிய ஜெய்ஸ்வால் தனது ஆறாவது சர்வதேச டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் இந்த தொடரில் அவருக்கு இரண்டாவது சதமாகவும் இது பதிவாகியது. தொடர்ந்து அவர் விளையாடி வருகிறார்.
நாடு முக்கியமில்லை
இந்த நிலையில் அவர் 97 ரன்னில் இருந்த பொழுது பந்தை தட்டி விட்டு ஓட மூன்று ரன்கள் எடுக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் கருண் நாயர் இரண்டு ரன்கள் போதும் என தடுத்து விட்டார். இதனால் அவரது சதம் தள்ளிப்போனது. அப்பொழுது ஜெய் ஸ்வால் பந்து தூரமாக இருக்கிறது இன்னொரு ரன் ஓடி இருக்கலாம் என்று கொஞ்சம் கோபமாக கூறினார்.
இதையும் படிங்க : நைட் வாட்ச்மேன் ஆகாஷ் தீப் செய்த சம்பவம்.. ஜெய்ஸ்வாலுடன் இணைந்து 107 ரன்கள் பார்ட்னர்ஷிப்.. மிரண்டு போன இங்கிலாந்து
இதைக் கேட்ட இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ” அவருக்கு நாடு முக்கியமில்லை தனிப்பட்ட சாதனைதான் முக்கியம்” எனப் பேசி ஸ்லெட்ஜிங் செய்தார். ஆனால் ஜெய்ஸ்வால் இதை மூளையில் ஏற்றுக் கொள்ளாமல் அடுத்த பந்தை மிகச் சிறப்பாக தடுத்து விளையாடி ஒரு ரன் எடுத்து சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். அதே சமயத்தில் இங்கிலாந்து வீரர்கள் களத்தில் தொடர்ந்து சீண்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






