நைட் வாட்ச்மேன் ஆகாஷ் தீப் செய்த சம்பவம்.. ஜெய்ஸ்வாலுடன் இணைந்து 107 ரன்கள் பார்ட்னர்ஷிப்.. மிரண்டு போன இங்கிலாந்து

0
220

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் விக்கெட்டுகளை விரைவில் இழந்து தோல்வியை தழுவும் என எதிர்பார்த்த, அந்நாட்டு ரசிகர்களுக்கு நைட் வாட்ச்மேன் ஆக களம் இறங்கிய ஆகாஷ் தீப் பெரிய சம்பவம் ஒன்றை செய்துவிட்டு சென்றிருக்கிறார்.

23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியது. இதில் ஜெய்ஸ்வால் மற்றும் அதிரடியாக விளையாடிய ராகுல், சாய் சுதர்சன் ஆகியோர் சொற்ப ரன்களின் ஆட்டம் இழந்தனர். இதனால் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் மேலும் விக்கெட்டுகள் விழுந்து விடக்கூடாது என்பதற்காக ஆகாஷ் தீப் நைட் வாட்ச்மேன் ஆக களமிறங்கினார்.

- Advertisement -

மிரள வைத்த நைட் வாட்ச்மேன்:

இதை அடுத்து மூன்றாவது நாள் ஆட்ட நேர தொடக்கத்தில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் என்ற ஸ்கோருடன் தொடந்தது. நான்கு ரன்களில் ஆட்டத்தை தொடங்கிய ஆகாஷ் தீப் யாருமே எதிர்பாராத வகையில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சுளுக்கு எடுத்தார்.

ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில் அதைப் பற்றி கவலைப்படாமல் கவுண்டர் அட்டாக்கிங் இன்னிங்சை ஆடி  இங்கிலாந்தை மிரள விட்டார். ஒரு கட்டத்தில் பௌண்டரிகள் பறக்க என்ன செய்வது என்று தெரியாமல் இங்கிலாந்து வீரர்கள் முழித்தனர். போதாத குறைக்கு ஒரு கேட்சையும் இங்கிலாந்து வீரர்கள் மிஸ் செய்தது.

- Advertisement -

ஆகாஷ் தீப் அரைசதம்:

இது,ஆகாஷ் நாள் தான் இன்று என ரசிகர்களை நம்ப வைத்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 70 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் ஜெய்ஸ்வால் பொறுமை காத்தார். தொடர்ந்து ஆகாஷ் தீப் அதிரடி காட்டியதால் அவர் சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இதையும் படிங்க: ஆசிய கோப்பையில் பும்ரா விளையாடுவது சந்தேகம்.. தேர்வுக்குழு எடுத்த முக்கிய முடிவு.. காரணமே இது தான்

எனினும் 94 பந்துகளை எதிர் கொண்டு 12 பவுண்டர்களுடன் ஆகாஷ் தீப் 66 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அப்போது இங்கிலாந்து ரசிகர்கள் மைதானத்தில் எழுந்து நின்று அவருக்கு கைதட்டி உற்சாகப்படுத்தினர். மூன்றாவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், ஆகாஷ் ஜோடி 107 ரன்கள் சேர்த்து இந்தியாவுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துவிட்டு சென்றிருக்கிறது. இதன் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் நைட் வாட்ச்மேன் ஆக களமிறங்கி அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஆகாஷ்  இரண்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.

- Advertisement -