ஜடேஜா விக்கெட் வேட்டை.. ஃபாலோ ஆனை தவிர்க்குமா வெஸ்ட் இண்டீஸ்.. 2வது நாளில் நடந்தது என்ன?

0
111

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் ஃபாலோ ஆனை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி போராடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி எப்படியாவது போட்டியை டிரா செய்தாலே போதும் என்ற மனநிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை இரண்டு விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் என்ற ஸ்கோருடன் இந்திய அணி தொடர்ந்தது. இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் சுப்மன் கில் நடப்பாண்டில் தன்னுடைய ஐந்தாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

- Advertisement -

இந்தியா 518-5 ரன்களுக்கு டிக்ளேர்:

இதே போன்று நடுவரிசையில் ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி 43 ரன்களும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல் 44 ரன்கள் எடுக்க இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 518 அன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய முதல் இன்னிங்சை தொடர்ந்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறிய நிலையில், இரண்டாவது டெஸ்ட்டில்  பேட்டிங் கொஞ்சம் முன்னேற்றத்தை கண்டிருந்தது. ஆனால் இந்தியாவை வீழ்த்தும் அளவுக்கு அது இருக்குமா என்பது சந்தேகமாகவே அமைந்துள்ளது. தொடக்க வீரர் ஜான் கேம்பெல் 10 ரன்களில் ஆட்டம் இழக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தேஜ்நரைன் சந்தர்பால் மற்றும் அலிக் ஏத்தன்சே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

முன்னேற்றம் கண்ட பேட்டிங்:

இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேஜ்நரைன் சந்திரபால் 67 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதை போன்று அரை சதத்தை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட அலிக்  ஏத்தன்சே 41 ரன்களில் வெளியேறினார்.
இதேபோன்று கேப்டன் ரஸ்டன் ஜேஸ் ஜடேஜாவிடம் டக் அவுட்டாக, அந்த அணியின் சாய் ஹோப் மட்டும் 31 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

இதையும் படிங்க: ரன் அவுட்டால் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் போச்சு.. யார் மீது தவறு? சந்தேகத்தை எழுப்பும் கும்ப்ளே

இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருக்கிறது. இது இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 378 ரன்கள் குறைவாகும். ஃபாலோ ஆணை தவிர்க்க வேண்டும் என்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி மேலும் 178 ரன்கள் அடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருக்கின்றனர்.

- Advertisement -