இன்று ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக அடித்தார். இதற்கு விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் களத்தில் எப்படி உதவியாக இருந்தார்கள்?
என்று கூறி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 270 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 116 ரன்கள் எடுத்தார்.
ரோகித் சர்மாவுடன் இதைத்தான் பேசினேன்
ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதம் குறித்து பேசி உள்ள ஜெய்ஸ்வால் “இப்பொழுது பெரிய சுமை இறங்கியது போல இருக்கிறது. நான் இதற்கு மிகவும் நன்றி உள்ளவனாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருக்கிறேன். நான் ரோகித் பாய்வுடன் எந்த டெம்போவில் விளையாடலாம்? எப்படி இன்னிங்ஸை அமைக்கலாம்? என்பது குறித்து நிறைய பேசிக் கொண்டிருந்தேன். எனக்கு இந்த தொடரில் நல்ல தொடக்கம் கிடைக்கும் நான் அதை பயன்படுத்தவில்லை. எனவே இந்த போட்டியை எப்படி இன்னிங்சை சமநிலையில் எடுத்துச் செல்வது என பேசிக்கொண்டோம்”
“நான் இந்த இன்னிங்ஸை எப்படி சரியாக எடுத்துச் செல்லப் போகிறேன் என்பது குறித்து தான் நான் மனதில் அதிகம் பேசிக் கொண்டிருந்தேன். சில நேரங்களில் நான் தாக்கி ஆட வேண்டி இருந்தது. சில நேரங்களில் ஓகே ஒரு சிங்கிள் எடுத்து பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்”
விராட் பாய் வந்ததும் செய்தார்
“எந்த ஷாட்டை எப்பொழுது ஆட வேண்டும், இன்னிங்சை எவ்வளவு ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து அதற்கு மனதை கட்டுப்படுத்திக் கொண்டேன். அதே சமயத்தில் தேவைப்படும் நேரத்தில் தாக்கி விளையாடவும் வேண்டும் என முடிவு செய்தேன்”
இதையும் படிங்க : கடந்த 2-3 வருஷமா நான் இப்படி விளையாடல.. ரோஹித் சர்மாவுக்காகவும் நான் சந்தோஷப்படறேன் – விராட் கோலி பேச்சு
“விராட் பாய் கிரீசுக்கு வந்த உடனேயே நிறைய ஷாட் ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் இருவரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அவர் எனக்கு சிறுசிறு இலக்குகள் தந்து கொண்டு இருந்தார். நான் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொன்னார். அது எனக்குப் பெரிய இலக்கை அடைய உதவியது” என்று கூறியிருக்கிறார்.






