இன்று தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றியது. மேலும் தொடர் நாயகன் விருது வென்ற விராட் கோலி இந்தத் தொடர் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 75 ரன், ஜெய்ஸ்வால் 116* ரன் விராட் கோலி 65* ரன் எடுத்தார்கள். இந்திய அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்படி ஆடியது இல்லை
இந்தத் தொடர் குறித்து விராட் கோலி பேசும் பொழுது ” இந்தத் தொடரில் நான் விளையாடிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மனது மிகவும் சுதந்திரமாக இருக்கிறது. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நான் இப்படி விளையாடவில்லை. நான் இப்படி விளையாட ஆரம்பித்தால் அது அணிக்கு மிகவும் பயனளிக்க கூடியதாக இருக்கும் என்று எனக்கு தெரியும். எந்த சூழ்நிலையையும் சமாளித்து அணிக்கு பயனளிக்க முடியும் என்று உணர்கிறேன்”
“நீங்கள் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி வரும் பொழுது உங்களுக்கு இயல்பாகவே உங்கள் பேட்டிங் மீது சில சந்தேகங்கள் வந்துவிடும். இங்கு ஒரு தவறை ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆவதற்கு போதுமானது. இது முழுவதும் ஒரு பயணம். இதில் நீங்கள் திறமையிலும் மனிதராகவும் முன்னேறுவீர்கள்”
நாங்கள் செய்வதற்கு மகிழ்ச்சி
“நான் சுதந்திரமாக விளையாடும் பொழுது இப்படி சிக்ஸர்கள் அடிக்க முடியும் என்று எனக்கு தெரியும். ராஞ்சியில் விளையாடிய போட்டி எனக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அதற்கு முன்பாக நான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் விளையாடி இருந்தேன். நீண்ட நாட்கள் கழித்து வந்து சிறப்பாக ஆரம்பிக்கும் போது அது நல்ல நம்பிக்கையை கொடுக்கிறது”
இதையும் படிங்க : 39 ஓவர் போதும்.. ரோகித் ஜெய்ஸ்வால் விராட் தீ மாதிரி சம்பவம்.. இந்தியா தொடரை வென்றது.. தென் ஆப்பிரிக்கா தோல்வி
“தொடர் சமநிலையில் இருந்தது எங்களிடம் இருந்த சிறந்ததை கொண்டு வந்தது. இதற்காகத்தான் நாங்கள் எத்தனை ஆண்டுகளாக விளையாடி வருகிறோம். தொடர் இப்படி சமநிலையில் இருந்தால் ஏதாவது அணிக்காக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். நானும் ரோகித் சர்மாவும் இத்தனை ஆண்டுகளாக இதை சிறப்பாக செய்து வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






