ஜோஸ் பட்லர் எனக்காக விக்கெட்டை தியாகம் செய்தபோது நான் நினைத்தது இதுதான் – கடைசியாக ரன் அவுட் பற்றி பேசிய ஜெய்ஸ்வால்!

0
3143

தனக்காக ஜோஸ் பட்லர் அவரது விக்கெட்டை தியாகம் செய்து சென்றபோது என்ன நினைத்தேன் என்பது பற்றி பகிர்ந்து கொண்டார் ஜெய்ஸ்வால்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை 13.1 ஓவர்களின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேஸ் செய்து ரன்ரேட்டை வெகுவாக உயர்த்தியது. மேலும் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றது.

- Advertisement -

ராஜஸ்தான் அணியின் இத்தகைய சிறப்பான வெற்றிக்கு முழு முக்கிய காரணம் அந்த அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால். இவர் 13 பந்துகளில் அரைசதம் விலாசி புதிய வரலாறு படைத்தார். மேலும் போட்டி முடியும் வரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 98 ரன்கள் விலாசி மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடினார்.

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 26 ரன்கள் விலாசி மிகச்சிறந்த பார்மை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால். போட்டியின் இரண்டாவது ஓவரில் ரன் ஓடும் பொழுது சிறிய தவறு செய்தார். அந்த நேரத்தில் ஜெய்ஸ்வால் விக்கெட் இழந்து விடக்கூடாது என்று தனது விக்கெட்டை தியாகம் செய்து ரன் அவுட் மூலம் வெளியேறினார் ஜோஸ் பட்லர்.

பட்லர் செய்த தியாகம் மிகச் சரியானது என்கிற அளவிற்கு ஜெய்ஸ்வால் கடைசி வரை நின்று விளையாடி கொடுத்து விட்டார். போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட போது ரன்அவுட் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெய்ஸ்வால்,

- Advertisement -

“நான் ராஜஸ்தான் அணிக்கு வந்ததில் இருந்தே ஜொஸ் பட்லருடன் ஓப்பனிங் இறங்கி வருகிறேன். அவரிடம் தான் நிறைய கற்றுக் கொண்டேன். அப்படிப்பட்ட ஒருவர் எனக்காக தனது விக்கெட்டை இழந்து வெளியேறியபோது, இந்த பொறுப்பை எடுத்துக்கொண்டு நாம் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று உத்வேகம் எடுத்துக் கொண்டேன். எனக்காக அவரது விக்கெட்டை தியாகம் செய்ததற்கு இந்த தருணத்தில் நன்றியையும் மன்னிப்பையும் கூறுகிறேன்.” என்றார்.

மேலும் பேசிய ஜெய்ஸ்வால், “13-வது பந்தில் அந்த ஒரு ரன்னை ஓடிய போது முதலில் என்னாலும் நம்ப முடியவில்லை. பின்னர் அதிவேக அரைசதம் அடித்துவிட்டேன் என்று ஒரு நிமிடம் நினைத்து பார்த்து கொண்டாடினேன். நிச்சயம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம். இந்த 98 ரன்கள் இன்னின்சையும் என்னால் மறக்க முடியாது. மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது.” என்று பேசினார்.