சதத்தை இரட்டை சதமாக மாற்ற ஜெய்ஸ்வாலுக்கு தெரியும் ; அவருடைய டிஎன்ஏவில் அது இருக்கு; முன்னாள் இந்திய வீரர் கருத்து!

0
2382

இன்று ஒரே நாளில் சமூக வலைதளத்தில் தேடப்படும் நபராக இந்திய இளம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் மாறி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் தனது அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்தது அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறது. தற்பொழுது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு சுருள, அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் முதல் விக்கட்டுக்கு 229 ரன்கள் சேர்த்து அசத்தியிருக்கிறார்கள். ரோஹித் சர்மா சதம் எடுத்து உடனே வெளியேற, தற்பொழுது 143 ரன்கள் உடன் ஜெய்ஸ்வால் களத்தில் நிற்கிறார்.

தற்பொழுது இந்த டெஸ்ட் போட்டி நடந்து வரும் ஆடுகளத்தில் பந்து திரும்பவதோடு மெதுவாகவும் வருகிறது. மேலும் பந்தை விரட்டினால் பந்து வேகமாகவும் பவுண்டரிக்கு செல்வது கிடையாது. எனவே இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கிறது. இதனால் ஜெய்ஸ்வால் அடித்த இந்த சதம் மிகவும் மதிப்பானதாகவும் பார்க்கப்படுகிறது.

தற்பொழுது ஜெய்ஸ்வால் பேட்டிங் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “முதலில் ஜெய்ஸ்வால் விளையாடிய விதம் பற்றி நாம் பேசுவோம். அவர் ஏற்கனவே தற்பொழுது 143 ரன்களில் விளையாடி வருகிறார். அவர் 200 ரன்கள் எடுத்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனென்றால் இந்த வீரருக்கு சதத்தை இரட்டை சதமாக எப்படி மாற்றுவது என்று நன்றாக தெரியும்.

- Advertisement -

அவர் தனது ஆட்டத்தில் இரண்டு அம்சங்களையும் சிறப்பாக வெளிகாட்டினார். அவரால் ரெஸ்ட் எடுத்து ரிவர்ஸ் ஸ்வீப் மாதிரியான கடினமான ஷாட்களை விளையாடவும் முடிகிறது. அதே சமயத்தில் அவர் கால்களை பயன்படுத்தி மிகவும் நேர்த்தியாக தற்காப்பாக விளையாடவும் செய்கிறார். இவரால் களத்தில் நேரம் ஒதுக்கி ரெட்ரோ கிரிக்கெட் விளையாடவும் முடிகிறது.

ஜெய்ஸ்வால் பற்றி அவரது ஆட்டம் முறைகள் நமக்கு என்ன சொல்கிறது? அவர் அடித்த அந்த ரிவர்ஸ் ஸ்வீப், ரன்கள் வராமல் அவர் களத்தில் நீண்ட நேரம் நிற்கும் பொழுது, அவர் எவ்வளவு நேரம் பொறுமையாக இருப்பார் என்று அவரது நேரத்தை காட்டுகிறதா?

நவீன கிரிக்கெட் வீரரான அவருக்கு ரிஸ்க் எடுப்பது, வித்தியாசமான பெரிய ஷாட்கள் விளையாடுவது என்பது அவருடைய டிஎன்ஏ விலேயே இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர் ஆடிய ரிவர்ஸ் ஸ்வீப் இதைத்தான் காட்டியது. ஆனால் அவர் இரண்டாம் நாளில் விளையாடிய விதம், அவரால் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி களத்தில் நீண்ட நேரம் விளையாட முடியும் என்பதையும் காட்டி இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!