“ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியா இங்கிலாந்தில் டெஸ்ட் விளையாட தயாராகிவிட்டார். காரணம் இதுதான்” – விளக்கிய முன்னாள் இந்திய வீரர்!

0
1579
Jaiswal

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து தற்பொழுது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

தற்பொழுது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இளம் அறிமுக வீரர் ஜெய்ஷ்வால் இருவரும் சதம் அடித்து முதல் விக்கட்டுக்கு 229 ரன்கள் தந்தார்கள். இரண்டாம் நாள் முடிவில் ஜெய்ஸ்வால் 143 ரன்கள் உடனும் விராட் கோலி 34 ரன்கள் உடனும் களத்தில் இருக்கிறார்கள்.

மிகச் சிறப்பாக விளையாடி உள்ள ஜெய்ஷ்வால் இன்று தொடர்ந்து விளையாடி ரன் குவிப்பதின் மூலம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக சாதனை செய்வதற்கும் மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இவரது ஆட்டம் முறை பல முன்னாள் வீரர்களை கவர்ந்துள்ளது.

இவரைப் பற்றி இஷாந்த் சர்மா கூறுகையில் ” என்னைப் பொறுத்தவரை ஜெய்சுவால் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முழுவதும் தயாராக இருக்கிறார். குறிப்பாக அவரது இந்த இன்னிங்ஸை பார்த்தால் அவர் புதிய பந்தில் அடித்த எல்லா பவுண்டரிகளும் புல் மற்றும் கட் ஷாட்டுகளில் வந்தவை.

- Advertisement -

ஃபுல் லென்ந்தில் வருகின்ற பந்தை கவர் டிரைவ் ஆடாமல் இருப்பது ஒரு துவக்க வீரருக்கு மிகவும் முக்கியமான விஷயமாகும். நீங்கள் கவர் டிரைவ் விளையாடினால் பின்னால் ஸ்லீப்பில் கேட்ச் ஆக அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது.

அவர் புதிய பந்தில் கட் மற்றும் புல் ஷாட் மூலம் மட்டுமே ரன்கள் அடித்தார். இது அவரது தனிப்பட்ட பலமாக இருக்கிறது. மற்ற வகையில் அவர் பந்தை தடுத்து விளையாடிக்கொண்டார். அல்லது பேட்டை நல்ல வேகத்தில் கொடுத்து விளையாடினார்.

ஆஸ்திரேலியா இங்கிலாந்து மாதிரியான நாடுகளில் விளையாட நீங்கள் கட் மற்றும் ஃபுல் ஷாட் விளையாட வேண்டியது அவசியமாகும். இந்த வகையில் ஜெயஸ்வால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் விளையாட முழுமையாக தயாராக இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!