பேஸ்பால் மந்திரம் முடிவுக்கு வரணும்.. இங்கி கோச் இத செய்ய மாட்டார்னு பிளேயர்ஸ் உணரணும் – இங்கி முன்னாள் வீரர்

0
182

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்து அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் பேஸ் பால் அணுகுமுறை குறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹார்மின்சன் சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ப்ரன்டன் மெக்கல்லம் டெஸ்ட் தொடரில் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து அணி தனது அணுகுமுறையை முற்றிலும் வேறு வடிவில் மாற்றியது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டிராவிற்கு விளையாடாமல் வெற்றிக்காகவே விளையாட வேண்டும் என்று இங்கிலாந்து வீரர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆக்ரோஷமான அணுகு முறையை பின்பற்றியதைத் தொடர்ந்து அதில் இங்கிலாந்து அணிக்கு கை மேல் பலனும் கிடைத்தது.

அதே மாதிரியான அணுகுமுறையை வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் பயிற்சியாளர் மேத்யூ மோட் தலைமையில் இங்கிலாந்து அணி கடைபிடித்தாலும் அது கை கொடுக்கவில்லை. 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பைக்கு பிறகு இங்கிலாந்து தொடர்ச்சியாக நான்காவது ஒருநாள் தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இந்திய தொடருக்கு முன்பாக மேத்யூ மோட் பயிற்சியிலர் பொறுப்பில் இருந்து விலக அவருக்கு பதிலாக மெக்கல்லம் வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடருக்கும் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

- Advertisement -

முடிவுக்கு வருமா பேஸ் பால்

ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் என இரண்டு தொடரிலும் இங்கிலாந்து அணி போராட்ட குணத்தையே வெளிப்படுத்தாமல் முழுவதுமாக ஆக்ரோஷமாக விளையாட போய் சரண் அடைந்தது. இந்த சூழ்நிலையில் அடுத்ததாக சாம்பியன் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ள நிலையில் பேஸ் போல் ஆட்டம் முறை முடிவுக்கு வருமா என இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மின்சன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:கேஎல் ராகுலுக்கு பதிலா பண்ட் இடத்தை.. வேறு ஒருவர் பூர்த்தி செஞ்சுட்டாரு.. சாம்பியன்ஸ் ட்ராபில வாய்ப்பு கம்மி – ஆகாஷ் சோப்ரா

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பிரெண்டன் மெக்கல்லம் மந்திரம் நேர்மறையாகவும், ஆக்ரோஷமாகவும் இருப்பதை பற்றியதாகும். ஆனால் ஒரு கட்டத்தில் பயிற்சியாளர் தங்களுக்காக பேட்டிங் செய்யவில்லை என்பதை வீரர்கள் உணர வேண்டும். நாங்கள் அதே தவறுகளை செய்து கொண்டிருக்கிறோம். இது பணியாளர்களைப் பற்றியது அல்ல முடிவு எடுப்பதை பற்றியதாகும். போதுமான அளவு இன்னும் பேட்டிங் வரவில்லை. எனவே இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -