12 வருட ஐபிஎல் சாதனையை உடைத்தார் ஜெய்ஸ்வால் ; 16 ஃபோர் 8 சிக்ஸர்; மும்பைக்கு எதிராக அதிரடி சதம்!

0
832
Jaiswal

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் இரண்டாவது போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினார்கள்.

- Advertisement -

ஆரம்ப முதலே இருவரும் அதிரடியாக விளையாட முதல் விக்கட்டுக்கு 72 ரன்கள் வந்தது. பட்லர் 18 ரன்களில் வெளியேறினார். ஆனால் ஜெய்ஸ்வால் அதிரடி மட்டும் நிற்கவே இல்லை.

மும்பை பந்துவீச்சை மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் நொறுக்கித் தள்ளி அரைசதத்தைக் கடந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 53 பந்தில் 13 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் தனது முதல் ஐபிஎல் சதத்தை நிறைவு செய்தார்.

தொடர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்களை 16 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரது இந்தச் சதத்தின் மூலம் ஒரு 12 வருட ஐபிஎல் சாதனை ஒன்று தகர்ந்து இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு தேர்வு பெறாத அன்கேப்டு வீரர்களில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் பஞ்சாப் அணிக்காக சென்னை அணிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு பால் வல்தாட்டி 63 பந்துகளில் 19 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 120 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது. தற்பொழுது ஜெய்ஸ்வால் 124 ரன்கள் எடுத்து இந்த 12 வருட ஐபிஎல் சாதனையை முறியடித்து இருக்கிறார்.

20 ஓவர்கள் விளையாடிய ராஜஸ்தான் அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் 14 புள்ளிகள் உடன் ராஜஸ்தான் அணி ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை மிக மிகப் பிரகாசப்படுத்திக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் மூன்று வெற்றிகள் மற்றும் பெற்றிருக்கும் மும்பை அணிக்கு பிளே ஆப்ஸ் வாய்ப்பு மிக மிக மங்கும்!