“இந்த மாதிரி தேர்வுக்கு ரசிகர்கள் ஜெய் ஷாவ விட மாட்டாங்க!” – பாகிஸ்தான் கம்ரன் அக்மல் கடுமையான விமர்சனம்!

0
594
Kamran

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தற்பொழுது பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் ஆசிய கோப்பை தொடரை நடத்தி வருகிறது. இரு நாடுகளில் ஆசிய கோப்பைத் தொடர் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்!

இந்த முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான உரிமை பாகிஸ்தான் நாட்டிடம் இருந்தது. எனவே கலந்து கொள்ளும் அனைத்து அணிகளும் பாகிஸ்தான் செல்ல வேண்டி இருந்தது.

- Advertisement -

இதற்கு இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் இரண்டும் ஒப்புக்கொள்ளவில்லை. பாதுகாப்பு காரணங்களை காட்டி தங்களால் வர முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டது. இதன் காரணமாக ஆசிய கோப்பைத் தொடர் நடைபெறுமா என்று சந்தேகம் நிலவியது.

இந்த சூழ்நிலையில் இறுதியாக இரு நாடுகளில் ஹைபிரிட் முறையில் ஆசிய கோப்பை தொடரை நடத்துவது என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவுக்கு வந்தது. இந்த முடிவுக்கு அனைத்து அணிகளும் ஒப்புக்கொண்டன.

இந்த நிலையில் இரண்டாவது நாடாக இலங்கையை இந்தியா தேர்வு செய்தது. துபாயில் வெயில் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் இந்திய தரப்பால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.

- Advertisement -

தற்பொழுது இலங்கையில் தொடர்ந்து மழை பெய்து வருகின்ற காரணத்தினால் எந்த போட்டியும் முழுமையாக நடைபெறவே முடியவில்லை. மழையின் காரணமாக பலரும் எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் போட்டி டிராவில் முடிந்து பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மற்றும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கம்ரன் அக்மல், மிக முக்கியமான தனது கருத்தை மிக காட்டமாகவே முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து பேசி உள்ள அவர் “இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் அனைத்து போட்டிகளும் மழையால் பாதிக்கப்படுவது போல் தெரிகிறது. இலங்கையில் எப்படியான நிலைமை இருக்கும் என்று முன்பே எல்லோருக்கும் தெரியும். மைதானங்களை மாற்றாவிட்டால் மில்லியன் டாலர்கள் அளவில் இழப்பு ஏற்படும். இந்த நிலைக்கு சிலர் அது ஈகோதான் காரணம். இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறாதது பலரது இதயங்களை உடைக்கும்.

ரசிகர்கள் தங்கள் விரும்பியது கிடைக்கவில்லை என்றால் நிச்சயம் கடுமையாக கோபம் கொள்வார்கள். இதற்காக நிச்சயம் ஜெய் ஷா விமர்சிக்கப்படுவார். கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்துவிட்டு ஆசியக் கோப்பையை பாகிஸ்தானில் நடத்துவதற்கு சம்மதித்திருந்தால், ரசிகர்கள் விரும்பும்படி இந்த ஆசியக் கோப்பை தொடர் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!