ஜெகதீசன் 245*.. சாய் கிஷோர் ஆல் ரவுண்ட் கலக்கல்.. தமிழக அணி பிரம்மாண்ட வெற்றி.. ரஞ்சி 2024

0
348
Ranji

தற்பொழுது நடைபெற்று வரும் ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மூன்றாம் கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்கும் 38 அணிகளும் தங்களின் மூன்றாவது ஆட்டத்தை விளையாடுகின்றன.

எலிட் பிரிவில் இடம் பெற்றிருக்கும் தமிழக அணியும் ரயில்வேஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி சில தினங்களுக்கு முன்னால் கோவை மைதானத்தில் துவங்கி நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங் செய்வது என அதிரடியாக முடிவு செய்தது. ஆனால் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் விமல் குமார் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

ஆனால் இதற்கு பரிகாரமாக தமிழக அணியின் மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் நாராயணன் ஜெகதீசன் ஆட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது. 402 பந்துகளை சந்தித்த அவர் 25 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 245 ரன்கள் குவித்து அசத்தினார்.

மேலும் பூபதி குமார் 67, சாய் கிஷோர் 59 ரன்கள் எடுத்தார்கள். 144 ஓவர்கள் பேட்டிங் செய்த தமிழக அணி 489 ரன்கள் குவித்தது. ரயில்வேஸ் அணியின் சார்பில் அக்சய் பாண்டே மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய ரயில்வேஸ் பிரதம் சிங் அதிரடியாக 94 பந்தில் 92 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிரபெரிய ரன் பங்களிப்புகள் எதுவும் வரவில்லை. ரயில்வேஸ் அணி இறுதியில் 79.4 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இதனால் அந்த அணி பாலோ ஆன் பெற்றது. தமிழக அணியின் தரப்பில் சந்திப் வாரியர் மற்றும் சாய் கிஷோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பாலோ ஆன் ஆன ரயில்வேஸ் இரண்டாவது இன்னிங்ஸில் மோசமாக மீண்டும் 114 ரன்களில் சுருண்டது. தமிழக அணி 129 ரன் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் சாய் கிஷோர் மற்றும் அஜித் ராம் இருவரும் தலா நான்கு விக்கெட் பெற்றார்கள்.