ஜடேஜா அபார பந்துவீச்சில் கான்வே அசத்தலான பேட்டிங்கில் ஹைதராபாத்தை அசால்ட்டாக வீழ்த்தியது சிஎஸ்கே!

0
211
CSK

ஐபிஎல் தொடரில் இன்று மிக முக்கிய போட்டி ஒன்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்ட போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது!

டாசில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்த முறை துவக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வாலுக்கு பதிலாக வந்த அபிஷேக் ஷர்மா 34, ஹாரி புரூக் 18, ராகுல் திரிபாதி 21, மார்க்ரம் 12, ஹென்றி கிளாசன் 17, மயங்க் அகர்வால் 2, வாஷிங்டன் சுந்தர் 9, யான்சென் 17* ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. மிகச் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா நான்கு ஓவர்களுக்கு 22 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

எளிதான இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் விக்கட்டுக்கு ருதுராஜ் கான்வே ஜோடி பதினோரு ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்து அசத்தலான பார்ட்னர்ஷிப்பை தந்தது. ருதுராஜ் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து வந்த ரகானே 9 ரன்களிலும், அம்பதி ராயுடு 9 ரன்களிலும் வெளியேறினார்கள். மொயின் அலி 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றார். ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய கான்வே 57 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 77 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்து ஆட்டம் இழக்காமல் நின்றார். சென்னை அணி 18.4 ஓவர்களில் ஏழு விக்கட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மயங்க் மார்க்கண்டே நான்கு ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

ஏழாவது போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கு இது நான்காவது வெற்றியாகும். இதன் மூலம் இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் சென்னை அணிக்கு பிரகாசமான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. ஒருவேளை மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் சீசன் என்றால், சென்னை அணி நல்ல முறையில் இந்த ஐபிஎல் தொடரில் இருப்பது நல்ல விஷயமாகும்!

- Advertisement -