ஜடேஜாவுக்கு கண்டிஷன் போட்ட பிசிசிஐ, ஆஸ்திரேலியா டெஸ்ட் சீரிஸ்ல ஆடனும்னா இதை பண்ணனுமாம்!

0
2983

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாட ஜடேஜாவிற்கு நிபந்தனை விதித்திருக்கிறது பிசிசிஐ.

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாமல் தவித்து வருகிறார். பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய அகடமியில் சிகிச்சை பெற்று வந்தார்.

நவம்பர் மாதம் முழுமையாக உடல்நிலை தேறிவிட்டார் என கூறப்படுகிறது. ஆகையால் பங்களாதேஷ் அணியுடன் நடந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு இலங்கை அணியுடன் நடைபெற்று வரும் தொடரிலும் விளையாடுவார்கள் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிலும் ஜடேஜா இடம்பெறவில்லை. அவரை எடுப்பதற்கு பிசிசிஐ முன்வந்தும், தனிப்பட்ட சில காரணங்களுக்காக விடுப்பு எடுத்துக் கொண்டார் என மற்றொருபுற தகவல்களும் வந்தன.

இந்நிலையில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி நியூசிலாந்து டி20 மற்றும் ஒருநாள் தொடர், அதன்பிறகு நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா அணியுடன் நடக்கும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் உடல்நிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே உறுதி செய்யப்படும் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜடேஜா ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெறும் டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்றால், ஒரு டொமஸ்டிக் போட்டியில் விளையாடி தனது உடல்தகுதியை நிரூபித்துக் காட்டவேண்டும். அதன்பிறகே இந்திய அணியில் சேர்க்கப்படும் என்கிற நிபந்தனையை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு ஜடேஜாவும் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் அவர் தரப்பில் இருந்து தகவல்கள் வந்திருக்கிறது.

ஒருவேளை, ஜடேஜாவால் உடல்தகுதியை நிரூபிக்க முடியவில்லை என்றால், உடனடியாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து அவர் பெயர் நீக்கப்படும் என்றும், மாற்று வீரராக வங்கதேச டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்ட ஒரு வீரரை அணிக்குள் எடுக்க தீட்டம் இருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன.