ஜடேஜா ரிங்குக்கு பண்ணது பெரிய தப்பு.. ஈகோதான் காரணம்.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

0
998
Jadeja

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு தோல்வியுடன் ஆரம்பித்திருக்கிறது. நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி தந்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்து வந்த திலக் வர்மா அதிரடியாக 20 பந்தில் 29 ரன்கள் எடுக்க, ஒரு முனையில் வழக்கம் போல் சிறப்பாக விளையாடிய சூரியக்குமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து, ரன் ரேட்டை உயர்த்தும் நேரத்தில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் பந்தை காற்றில் அடிக்காமல் மிகவும் சரியான திட்டத்துடன் விளையாடி வந்த ரிங்கு சிங் ஒன்பது பவுண்டரிகள் உடன் 30 பந்தில் தனது முதல் சர்வதேச அரை சதத்தை நிறைவு செய்து களத்தில் நின்றார்.

- Advertisement -

இந்த நிலையில் ஜிதேஷ் சர்மா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற ரவீந்திர ஜடேஜா உள்ளே வந்தார். ஆடுகளத்தில் கொஞ்சம் சுழல் பந்து வீச்சு எடுபட, எய்டன் மார்க்ரம் தைரியமாக தானே 19வது ஓவரை வீச வந்தார்.

அதுவரை பொறுமையாக இருந்த ரிங்கு சிங் அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை அற்புதமான முறையில் சிக்ஸர்களுக்கு விரட்டி இந்திய அணியின் ஸ்கோரை 19 ஓவரில் 178 ரன்கள் என உயர்த்தினார்.

இந்த நிலையில் கோட்சி வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தை தூக்கி அடித்த ரவீந்திர ஜடேஜா கடினப்பட்டு இரண்டு ரன்கள் ஓடி, ரிங்கு சிங் விளையாட முடியாமல் செய்தார். மேலும் அடுத்த பந்தில் ஆட்டமும் இழந்தார். அதற்கு அடுத்து வந்த அர்ஸ்தீப் சிங் முதல் பந்திலேயே விக்கெட்டை கொடுத்தார். இதனால் கடைசி ஓவரின் முதல் மூன்று பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே வந்தது.

கடைசிக்கட்ட ஓவர்களில் விளையாடுவதற்கு என்றே தயாராகி இருக்கும் ரிங்கு சிங்கை, சிங்கிள் எடுத்து ஜடேஜா விளையாட விட்டிருந்தால், இந்திய அணியின் ஸ்கோர் இன்னும் கொஞ்சம் அதிகரித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவர் விடாப்பிடியாக இரண்டு ரன்கள் ஓடினார். இதனால் கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகள் வீணான நிலையில், மழை வந்து ஆட்டம் அத்தோடு நின்றது.

தற்பொழுது ஜடேஜா தன்னுடைய சீனியாரிட்டி ஈகோவின் காரணமாகவே இப்படி செய்தார் என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -