“ஜடேஜா ஒன்றும் முரளிதரன் வார்னே கிடையாது.. ஈஸியா விளையாடலாம்” – பீட்டர்சன் மீண்டும் அதிரடி பேச்சு

0
67
Jadeja

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வரவிருக்கின்ற ஒன்றரை மாதங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கிரிக்கெட் விருந்து காத்திருக்கிறது.

இந்த காலகட்டத்தில் பெரிய கிரிக்கெட் நாடுகளான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கின்றன.

- Advertisement -

இங்கிலாந்து அணி தாக்குதல் பாணியில் டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகுவதாலும், இந்தியாவில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அந்த அணுகு முறையில் விளையாட முடியாததாலும், இந்த போட்டி எப்படி இருக்கும் என்கின்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக ரசிகர்களிடம் இருக்கிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வகையில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, இரு அணிகளின் முன்னாள் வீரர்களும் தங்களால் முடிந்தவரை இந்தத் தொடருக்கு சுவாரசியத்தை தங்கள் கருத்துகளால் ஏற்றி வருகிறார்கள்.

வழக்கம்போல் இந்திய தரப்பிலிருந்து கருத்துக்கள் மென்மையாக வந்து கொண்டிருக்க, அதே வழக்கம் போல் இங்கிலாந்து தரப்பில் இருந்து அதிரடியான கருத்துக்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.

- Advertisement -

இங்கிலாந்து முன்னால் வீரர் மான்டி பனேசர் விராட் கோலியை ஜோக்கர்ஸ் என்று செய்யும்படிஇங்கிலாந்து அணிக்கு அறிவுரை சொல்கிறார், இன்னொரு பக்கம் கெவின் பீட்டர்சன் ஜடேஜாவை பெரிய பந்துவீச்சாளர் இல்லை என்கின்ற அளவுக்கு பேசுகிறார். இப்படி தொடரை சுற்றி களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

கெவின் பீட்டர்சன் பேசும் பொழுது “ஜடேஜாவை நான் நிறைய எதிர்கொண்டு விளையாடியிருக்கிறேன். இது டெக்னிக் பற்றியது. ஜடேஜா ஒரு முரளிதரன் இல்லை ஒரு வார்னே கிடையாது. அவர் ஒரே முறையில் பந்து வீசக் கூடியவர். அதில் திடீரென ஸ்லைட் செய்வார்.

உங்களுடைய கால்கள் வலிமையாக நீங்கள் சரியாக நின்றால், பந்து ஸ்கிட் ஆகி வரும் பொழுது, பந்துக்கு கீழே சென்று, பந்து வருகின்ற லைனுக்கு விளையாட வேண்டும். இப்படி செய்வதின் மூலமாக எல்பிடபிள்யு மற்றும் போல்ட் ஆவதில் இருந்து நாம் தப்பிப்பது உறுதி செய்து கொள்கிறோம்.

ஸ்லிப்பில் எட்ஜ் எடுப்பது குறித்து எந்த கவலையும் கிடையாது. நீங்கள் எல்பிடபிள்யு மற்றும் போல்ட் ஆவதுதான் பிரச்சனை. நீங்கள் பந்தின் லைன் மற்றும் லென்த்தை பார்த்து அதற்கேற்ற விளையாடுவதற்கு உங்களுக்கு நிறைய நேரம் இருக்கும். மேலும் நான் இந்தியாவில் விளையாடும் பொழுது அஸ்வின் எத்தனை முறை அடித்திருக்கிறேன்” என்று பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.