தோனிக்கு அடுத்து ஜடேஜா கேப்டன் கிடையாது ; இவர்தான் கேப்டன்! – கவாஸ்கர் உறுதி!

0
2797
CSK

உலகின் நம்பர் ஒன் டி20 லீக் ஆன ஐபிஎல் தொடரில் சென்னையை மையமாகக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக வெற்றிகரமான அணி. இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனான மகேந்திர சிங் தோனி தொடர்ந்து 14 ஆவது சீசனாக சிஎஸ்கே அணியை வழிநடத்த இருக்கிறார்!

கடந்த ஐபிஎல் சீசனின் போது எதிர் காலத்தை கருத்தில் கொண்டு, சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை கேப்டன் ஆக்கி பழக்குவதற்காக தாமாக கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி நகர்ந்து கொண்டார்.

- Advertisement -

ஆனால் ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்ஷியில் அணி நிர்வாகத்திற்கு பெரிய திருப்தி இல்லாத காரணத்தால் அவர் நடுவில் நீக்கப்பட்டு மீண்டும் மகேந்திர சிங் தோனியை கேப்டனாக வந்தார். இதனால் ரவீந்திர ஜடேஜா பெரிய மன அதி திருப்தியில் இருந்து தற்போது சரியாகி சென்னை அணியில் தொடர்கிறார்.

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு சென்னை அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனாக யார் இருப்பார்கள் என்ற கேள்வி சென்னை அணி ரசிகர்களை தாண்டி ஐபிஎல் ரசிகர்களிடையே பொதுவாக இருந்து வருகிறது. தற்பொழுது இது குறித்து இந்திய கிரிக்கெட் லெஜன்ட் கவாஸ்கர் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

கவாஸ்கர் இது பற்றி கூறும் பொழுது
“ருதுராஜ் உள்நாட்டுத் தொடர்களில் மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். இதனால் அவருக்கு கேப்டன் பதவி அனுபவம் கிடைத்துள்ளது. மிக முக்கியமாக அவர் அணியில் உறுதியாக இடம்பெறும் வீரராக இருப்பார். இப்படி உறுதியாக அணியில் இடம்பெறக்கூடிய வீரர்தான் கேப்டனாகவும் இருக்க முடியும். சிஎஸ்கே அணிக்கான கேப்டன் தேர்வுகளில் என்னுடைய முதல் தேர்வு இவர்தான். கேப்டன்சி அவரை பேட்டிங்கில் மிகவும் நிலையானவராக மாற்றும்” என்று நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசி உள்ள அவர்
” ரோகித் சர்மா முதன்முதலாக மும்பை அணிக்கு கேப்டனாக இருப்பதற்கு முன்னாள் அவர் சில அழகிய கேமியோக்கள் விளையாடினார். ஆனால் கேப்டன் ஆன பிறகு அவர் மிகவும் பொறுப்பாகி நிறைய ரன்களை அணிக்காக கொண்டு வந்தார். அவருடைய விக்கெட் அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இதே போல் ருதுராஜ் கேப்டன் ஆகும் பொழுது அவரும் தன் விக்கெட்டின் மதிப்பை உணர்ந்து மேலும் நிலையான விளையாட்டை வெளிப்படுத்துவார் என்று கருதுகிறேன்!” என்று கூறியுள்ளார்!

சென்னை அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறும் பொழுது ” கடந்த இரண்டு தலைமுறைகளில் இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டனாக இருக்கும் மகேந்திர சிங் தோனியிடம் இருந்து ருத்ராஜ் கற்றுக்கொள்ள எவ்வளவு சிறப்பான வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. மேலும் தற்பொழுது அணியில் பென் ஸ்டோக்ஸ் இருப்பது அவருக்கு இன்னும் சிறப்பான ஒரு வசதியாகும்” என்று கூறியிருக்கிறார்!