வீடியோ: கேட்ச் பிடிக்க வந்த ஜட்டுவை இடித்து கீழே தள்ளிய கிளாசன்.. தோனிக்காக கோபத்தை கன்ட்ரோல் பண்ணிய ஜட்டு! – காரசாரமான சம்பவம்!

0
1553

கேட்ச் எடுக்க வந்த ஜட்டுவை இடித்து கீழே தள்ளினார் கிளாஸன். இதனால் ஆத்திரப்பட்ட ஜடேஜா, பின்னர் தோனிக்காக அமைதியாக சென்றார். இந்த நிகழ்வு போட்டியின் நடுவில் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோவை கீழே காணலாம்.

சிஎஸ்கே அணி பவுலிங் செய்து கொண்டிருக்கும்பொழுது, போட்டியின் 14ஆவது வரை ஜடேஜா வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட மயங்க் அகர்வால், பந்தை அடித்தபோது ஜடஜா வசம் பந்து பறந்து சென்றது. அதை கேட்ச் எடுக்க ஜடேஜா முனைப்பு காட்டினார்

- Advertisement -

அந்த நேரத்தில் குறுக்கே வந்து ஜடேஜாவின் மீது கேட்ச் எடுக்கவிடாமல் கீழே தள்ளினார், மறுமுனையில் நின்று கொண்டிருந்த ஹென்றிக் கிளாஸன். கேட்ச் எடுக்க முடியாமல் போனது மற்றும் கீழே தள்ளி விட்டது ஜடேஜாவை கோபப்படுத்தியது.

சட்டென்று தோனியை பார்த்தபிறகு, ஜடேஜா பெரிதாக கோபப்படாமல் அடுத்த பந்தை வீசுவதற்கு நகர்ந்து சென்றார். அந்த ஓவர் முழுவதும் கோபத்துடன் காணப்பட்ட ஜடேஜா, அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் மயங்க் அகர்வால் விக்கெட்டை தூக்கினார். மகேந்திர சிங் தோனி ஸ்டம்பிங் செய்து இந்த விக்கெட் வீழ்த்துவதற்கு உதவினார். அதன்பிறகு ஜடேஜா கோபம் சற்று குறைந்தது.

போட்டியின் நடுவே நடந்த இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கோபமாக இருந்த ஜடஜாவை அழைத்த தோனி, ‘சாந்தப்படுத்திக் கொள். தண்ணீர் குடி’ என்று பேசியதும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஜடேஜாவை கிளாஸன் இடித்துக் கீழே தள்ளிய வீடியோ பின்வருமாறு காணலாம்.

- Advertisement -

ஹென்றிக் கிளாசன் ஜடேஜாவை கீழே தள்ளிய வீடியோ:

தொடர்ந்து நடைபெற்ற இப்போட்டியில் ஹைதராபாத் அணி 134 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸை முடித்தது. இந்த இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18.4 ஓவர்களில் 138 ரன்கள் அடித்தது. இறுதியாக ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. பந்து வீட்டில் அசத்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.