ஜடேஜா எனக்கு டிப்ஸ் கொடுத்தார்.. அடுத்தமுறை இந்தியாவிற்கு வரும்போது சம்பவம் செய்வேன் – ஆஸ்திரேலிய ஸ்பின்னர் பேட்டி!

0
148

ஜடேஜாவிடம் பேசிய பதினைந்து நிமிடங்களில் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். அடுத்த முறை இந்திய துணைக்கண்டகளுக்கு வரும்பொழுது இவை அனைத்தும் உனக்கு பயன்படும் என்றும் அறிவுரை கூறினார் என ஆஸ்திரேலியா அணியின் ஸ்பின்னர் மேட் குன்னமென் பேசியுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராஃபியில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியினர் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களை வைத்து அட்டாக் செய்தனர். முதல் டெஸ்டில் வெறும் இரண்டு ஸ்பின்னர்களை மட்டுமே வைத்து விளையாடிய அவர்கள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்து அடுத்த மூன்று போட்டிகளிலும் கூடுதலாக ஒரு ஸ்பின்னரை இறக்கி விளையாடினர்.

- Advertisement -

நேத்தன் லயனை விட மற்ற இரண்டு ஸ்பின்னர்களும் அனுபவமற்றவர்கள். இம்முறை தான் டெஸ்ட் போட்டிகளுக்கு அறிமுகம் ஆனார்கள். அதில் டாட் மர்பி 14 விக்கெட்டுகளும், குன்னமென் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கட்டுகளும் எடுத்திருந்தார்.

ஆஸ்திரேலியா அணி இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் வெற்றி பெறுவதற்கு குன்னமென் முக்கிய பங்காற்றினார்.அவர் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தி ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த அவர், “எனக்கு ஜடேஜாவை மிகவும் பிடிக்கும். அவரை பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். கூடுதலாக அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.” என்று கூறினார். மேலும், “ஜடேஜாவிடம் நான் சென்று பேசியபோது தொடர் முடிந்த பிறகு உனக்கு கற்றுக் கொடுக்கிறேன் என்று கூறியதாகவும் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கேற்றவாறு நான்காவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு, நேத்தன் லயன் ஜடேஜாவிடம் குன்னமென்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜடேஜா தன்னிடம் என்ன கூறினார் என்பதை தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். “இந்த டெஸ்ட் தொடரில் மூன்று ஸ்பின்னர்கள் செயல்பட்டதையும் அவர் வெகுவாக பாராட்டி பேசினார். மேலும் ஒரு 15 நிமிடங்கள் அவரிடம் நான் பேசி இருப்பேன். அதற்குள் நிறைய கற்றுக் கொடுத்தார். இந்திய துணை கண்டங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்று டிப்ஸ் கொடுத்து,அடுத்த முறை வரும்பொழுது பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். மிகவும் பண்புடன் எங்களை நடத்தினார்.

- Advertisement -

அவர் எனது பந்துவீச்சை அங்கீகரித்து நன்றாக இருக்கிறது என்று கூறியது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் அவர் கொடுத்த அறிகுறிகளை ஏற்றுக்கொண்டு அடுத்த முறை இந்தியாவிற்கு வரும் பொழுது நன்றாக பயன்படுத்துவேன். என பேசினார்.