இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட்டில் யாருமே படைக்காத சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியுள்ள ஜடேஜா

0
179
Ravindra Jadeja Man Of the Match

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் மொஹாலியில் தொடங்கியது. ஒரு பக்கம் ரோஹித் ஷர்மா தலைமையிலான புதிய இந்திய அணி இந்த டெஸ்டில் அடி எடுத்து வைத்தது. மறுபக்கம் முன்னாள் கேப்டன் விராட் கோலி தன்னுடைய 100ஆவது டெஸ்ட் போட்டியில் அடி எடுத்து வைத்தார்.

போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி இந்திய அணி நேற்று முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக ரிஷப் பண்ட் 96 ரன்கள் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நேற்று இரண்டாம் நாளில் தங்களுடைய முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் குவித்தது. இன்று மூன்றாம் நாள் விளையாட தொடங்கிய இலங்கை அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, 174 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 400 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த காரணத்தால் மீண்டும் ஃபாலோ ஆன் நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டது.

முதல் இன்னிங்சை முடித்த கையோடு மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்து மீண்டும் ஆட்டமிழந்தது. இந்திய அணி இறுதியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டுள்ளது.

ஒற்றை ஆளாக இலங்கை அணியை துவைத்தெடுத்த ஜடேஜா

சற்று முன்னர் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸ் முடிவில் 175* ரன்கள் குவித்து பந்து வீச்சில் சரியாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜா மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணி வீரர்கள் மத்தியில் இரு அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் முடிவில், பேட்டிங்கில் சதமடித்து பவுலிங்கில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களாக இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். இந்த டெஸ்ட் போட்டியில் அந்த குறிப்பிட்ட சாதனையை செய்ததன் மூலம் ரவீந்திர ஜடேஜாவும் அவர்களுடன் இணைந்துள்ளார்.

இந்திய வீரர்கள் மத்தியில் ஒரு இன்னிங்ஸ்சில் 100 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்கள் :

மங்காட் – 184 மற்றும் 5/196 (இங்கிலாந்துக்கு எதிராக)

உம்ரிகர் – 172 * மற்றும் 5/107 (வெஸ்ட் விண்டீஸ் எதிராக)

ஜடேஜா – 175 * மற்றும் 5/41 (இலங்கைக்கு எதிராக)

இந்த சாதனையை தொடர்ந்து மற்றொரு வரலாற்று சாதனையை ரவீந்திர ஜடேஜா இன்றைய போட்டியில் கூடுதலாக இன்று செய்து காட்டியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் ஒரு டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் 150 ரன்களுக்கு மேலும் அதேசமயம் பந்துவீச்சில் குறைந்தபட்சம் ஒன்பது விக்கட்டுகளையும் இதுநாள் வரையில் கைப்பற்றியது இல்லை.

ஆனால் ரவீந்திர ஜடேஜா தற்போது நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் 175* பௌலிங்கல் மற்றும் பவுலிங்கில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். எனவே அந்த வரலாற்று சாதனைக்கும் ரவீந்திர ஜடேஜா இன்று சொந்தக்காரர் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.