“போதுமா இப்ப சொல்லிட்டேன்.. இனி சத்தியத்தை மீற மாட்டேன்” ஓய்வு முடிவை வெளியிட்ட டேவிட் வார்னர்!

0
2296
Warner

தற்போது உலகப் புகழ்பெற்ற டெஸ்ட் தொடரான ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது!

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான இந்தத் தொடரில் தற்பொழுது 4 போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன. இதில் கடைசி போட்டி டிராவில் முடிய, மற்ற மூன்று போட்டிகளில் இரண்டை ஆஸ்திரேலியாவும் ஒன்றை இங்கிலாந்தும் வென்று இருக்கின்றன.

- Advertisement -

இதன் காரணமாக கடைசியாக ஆசஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியாவிடமே ஆசஸ் கோப்பை அளிக்கப்படும். கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா வெல்லாவிட்டாலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படும்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்காக ஆசஸ் தொடரை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தற்போதைய ஆசஸ் தொடர் முடிவடைந்ததும் ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் ஓய்வு பெறுவார்கள் என்கின்ற கருத்தை வெளியிட்டு இருந்தார். இது எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் இது குறித்து நேரடியாக டேவிட் வார்னரிடம் கேட்கப்பட்ட பொழுது
“இப்படி ஒரு செய்தியை நான் கேள்விப்படவும் இல்லை. பார்க்கவும் இல்லை. நான் அப்போது கோல்ப் விளையாட்டில் ஈடுபட்டு இருந்தேன்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து டேவிட் வார்னரிடம் அவரது ஓய்வு எப்போது இருக்கும் என்று கேட்கப்பட்ட பொழுது ” நான் எப்படியும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் உலகக்கோப்பையில் விளையாட போவது இல்லை. நான் எப்பொழுதும் சொல்வதுதான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நன்றாக இருக்க வேண்டும் என்றால் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் பங்குபெற்று விளையாட வேண்டும். எனவே நான் இதற்காக ஷீல்ட் கோப்பையில் விளையாட கூட செய்யலாம். தற்பொழுது நான் வலைகளில் சிறப்பான முறையில் பந்துகளைச் சந்தித்து விளையாடுகிறேன்” என்று கூறினார்.

ஆனாலும் செய்தியாளர்கள் தொடர்ச்சியாக டேவிட் வார்னர் இடம் அழுத்தம் கொடுத்து ஓய்வு எப்பொழுது என்று கேட்ட பொழுது அதற்கு அவர் ” சரி நான் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதை தாண்டி மேற்கொண்டு விளையாட மாட்டேன். வெஸ்ட் இண்டீஸில் விளையாட மாட்டேன். பாகிஸ்தான் தொடரே எனக்கு கடைசியாக இருக்கும் என்பது முடிவு. இப்பொழுது நான் கூறிய வார்த்தைகள் உங்களிடம் இருக்கிறது. நான் இதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்!” என்று முடிவாக கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் அணி 2023 – 24 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரோடு தனது சொந்த நாட்டில் டேவிட் வார்னர் ஓய்வு பெற விரும்புகிறார். அதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் தடையாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவரது ஓய்வு அவரது விருப்பப்படி அவரது சொந்த நாட்டில் நடக்க இருக்கிறது!