“ஒரு மாசம் வேலை செஞ்சு நொந்து போயிட்டேன்.. பாபர் தைரியமா மாறனும்!” – ஷாகித் அப்ரிடி கடுமையான விமர்சனம்!

0
2717
Babar

பாகிஸ்தான் அணி நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராகப் பெற்ற தோல்வி, அந்த அணியையும், அணி நிர்வாகத்தையும் மிகக் கடுமையாகப் பாதிப்படைய செய்திருக்கிறது!

இந்த நிலையில் இரண்டாவது சுற்றில் நாக் அவுட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அடைந்த தோல்வி, பாகிஸ்தான் அணி மீதான விமர்சனத்தை மிக அதிகமாக உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் மிகவும் அதிகபட்சமான எதிர்பார்ப்பை கொண்டு இருந்த அணியாக பாகிஸ்தான் இருந்தது. இரண்டாவது இடம்தான் இந்திய அணிக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் அணி எந்த அளவுக்கு செட்டில் செய்யப்பட்ட அணியாக இருந்தது என்றால், போட்டிக்கு முன் தினம் இரவே அடுத்த நாள் விளையாடும் பாகிஸ்தான் அணியை அறிவிக்கும் அளவுக்கு இருந்தது. இந்த காரணத்தால் தற்போது ஏற்பட்டிருக்கும் சரிவை பாகிஸ்தான் தரப்பில் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறும் பொழுது “நான் ஒரு மாதம் மட்டும் தலைமை தேர்வாளராக இருந்தேன். என்னை நம்புங்கள், அங்கு அவ்வளவு பிரச்சினைகளும் குழப்பங்களும் இருக்கின்றன. கேப்டனுக்கு ஒரு விருப்பம் இருக்கிறது. பயிற்சியாளருக்கு வேறொரு விருப்பம் இருக்கிறது. இருவரும் எனக்கு வெவ்வேறான அறிக்கைகள் கொடுத்தார்கள். வீரர்களோ இதற்கு மாறுபட்ட அறிக்கையை கொடுத்தார்கள்.

- Advertisement -

இவர்களுக்குள் சுத்தமாக தொடர்பே கிடையாது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு எப்படி இயங்குகிறது? என்று எனக்கு புரியவே இல்லை. இவர்களிடையே எந்த ஒருங்கிணைப்பும் தொடர்பும் கிடையாது என்று தெரிந்தது.

நாம் உலகக் கோப்பைக்கு செல்ல இருப்பதால், கேப்டன் பாபர் அசாம் இடம் அனைவரும் தொடர்பு கொண்டு பேசி அவரை வலிமையானவராக மாற்ற வேண்டும். எனது பிரச்சனை என்னவென்றால், நீங்கள் மூன்று ஆண்டுகளாக அணியை வழிநடத்தி வருகிறீர்கள், உங்களைச் சுற்றி வல்லுனர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் பேசி உங்கள் கேப்டன்சியை வலிமையாக்குங்கள். நீங்கள் பெரிய வீரர். அதே சமயத்தில் மக்கள் மனதில் நீண்ட காலம் இருக்கக்கூடிய கேப்டனாக மாறுவதற்கான வேலைகளைச் செய்யுங்கள்!” என்று கூறியிருக்கிறார்!