“உண்மைய சொல்ற நேரம் வந்திருச்சு.. என் ஓய்வுக்கு காரணம் இதுதான்!” – சோகமான விஷயத்தை பகிர்ந்த ஏபி டிவில்லியர்ஸ்!

0
464
Devilliers

நவீன கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான பேட்ஸ்மேன் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ். 360 டிகிரியில் அவர் விளையாடியதைப் போல, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு தற்பொழுது ஆள் கிடையாது.

ஏபி.டிவில்லியர்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 பந்துகளை சந்தித்து விளையாடவும் முடியும், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதத்தை அடிக்கவும் முடியும், டி20 கிரிக்கெட்டில் ஒரு மின்னல் வேக அரை சதத்தால் ஒட்டுமொத்த போட்டியையும் தன் அணிபக்கம் மாற்றவும் முடியும்.

- Advertisement -

அவர் ஏதாவது ஒரு கிரிக்கெட் வடிவத்தில் வலிமையான பேட்ஸ்மேன் ஆக இல்லாமல், மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்கக்கூடிய பேட்ஸ்மேன் ஆக இருந்தார். மேலும் அவர் விக்கெட் கீப்பிங் சிறிது காலம் செய்தார். இது மட்டும் இல்லாமல் ஃபீல்டில் அவர் உண்டாக்கிய தாக்கமும் பெரியது.

இந்த நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத பொழுது தனது ஓய்வு முடிவை அறிவித்ததோடு, மேலும் பெரிய அளவில் பணம் கிடைக்கும் ஐபிஎல் தொடரில் இருந்தும் சீக்கிரத்தில் ஓய்வு பெற்று ஆச்சரியப்படுத்தினார்.

தற்பொழுது சீக்கிரத்தில் ஓய்வு பெற்றதற்கான அதிர்ச்சிகரமான காரணத்தை கூறிய ஏபி டி வில்லியர்ஸ் “என்னுடைய இளையவர் ஒருவர் குதிகாலால் தெரியாத விதமாக என் கண்ணில் உதைக்க, எனக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது. பின்பு இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பொழுது, மருத்துவர் என்னிடம் இந்த கண்பார்வையை வைத்துக்கொண்டு எப்படி கிரிக்கெட் விளையாடினாய் என்று கேட்டார். கடைசி இரண்டு ஆண்டுகளில் என்னுடைய இடது கண் பார்வையில்
தான் விளையாடினேன்.

- Advertisement -

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கோவிட் ஒரு முக்கியமான பங்கை கொண்டிருந்தது என்பது உண்மை. அதேபோல் 2015 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தோல்விக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அதைக் கடக்க எனக்கு சிறிது காலம் பிடித்தது. பின்பு நான் அணிக்கு திரும்பிய பிறகு அதே பழைய கலாச்சாரம் அங்கு இல்லை.

என் கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி நான் அடிக்கடி யோசித்தேன். என் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. அதே சமயத்தில் நான் ஐபிஎல் உட்பட எந்த கிரிக்கெட்டையும் விளையாட விரும்பவில்லை. 2018 ஆம் ஆண்டு எல்லாவற்றில் இருந்தும் விலகிக் கொண்டேன். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கொஞ்சம் செயல்பட விரும்பினேன். இறுதியாக ஆஸ்திரேலிய மற்றும் இந்தியாவை வீழ்த்த நினைத்தேன். அதே சமயத்தில் என் மீது எந்த கவனத்தையும் வரவிடாமல் நான் ஒதுங்கிக் கொள்ள முடிவு செய்தேன்!” என்று கூறியிருக்கிறார்!