” பேரை கேட்டாலே சும்மா அதிருதில்ல… அவரின் பெயரை வரலாறு சொல்லும்”- சஹால் பற்றி உணர்வுபூர்வமாக பேசிய கேப்டன் சாம்சன்.!

0
166

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது .

கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் நித்திஷ் ரானா ஆகியோர் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இதன் காரணமாக அந்த அணியால் நெருக்கடியான ஒரு இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை . 20 ஓவர்களின் முடிவில் 149 ரன்களை மட்டுமே எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்தது .

- Advertisement -

ராஜஸ்தான் அணியின் சஹால் மிக சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் ட்ரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட் களை கைப்பற்றினார் . இதனைத் தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான்

அந்த அணி துவக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடி 13.1 ஓவர்களில் 150 ரன்கள் எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . அந்த அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 98 ரன்கள்டனும் சஞ்சு சாம்சன் 48 ரன்கள்டனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது . மும்பை அணியுடன் 12 புள்ளிகளை பகிர்ந்து கொண்டாலும் நேற்றைய போட்டியில் பெற்ற மிகப் பெரிய வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் காரணமாக அந்த அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது . இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் அந்த அணியின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது

- Advertisement -

நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சஹால் 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார் . இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக வீக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் . மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஹைதராபாத் அணியுடன் நடைபெற்ற போட்டியில் பிராவோ வின் சாதனையை சமன் செய்த இவர் இந்தப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் .

போட்டிக்கு பின் பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் ” அவரை லெஜன்ட் என்று அழைப்பதற்கான சரியான நேரம் வந்துவிட்டது . ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட் கை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருப்பதன் மூலம் சஹால் நாம் லெஜன்ட் என்று அழைக்கலாம் . அவர் ராஜஸ்தான் அணியின் சொத்து . வந்து வீச வரும்போது எந்த மாதிரியான பந்துகளை வீச வேண்டும் என்று அவருக்கு தெரியும் . நான் அவரிடம் தந்தை மட்டும் தான் கொடுப்பேன் எந்தவித ஆலோசனையும் தெரிவிக்க மாட்டேன் களத்தில் என்ன செய்வதென்று அவருக்குத் தெரியும்” என்று கூறி முடித்தார் சாம்சன்.