ரஹானே மாதிரி ஒருத்தரை மிஸ் பண்ணோம்; செம்மையா கம்பேக் கொடுப்பாரு பாருங்க – ராகுல் டிராவிட் பேட்டி!

0
765

“ரகானே போன்ற அனுபவம் மிக்க வீரர் இந்திய அணிக்கு கட்டாயம் தேவை. குறிப்பாக வெளிநாட்டு மைதானங்களில் பல சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திய அனுபவம் கொண்டவர்.” என்று ரகானே கம்பேக் கொடுத்ததற்கு கருத்து தெரிவித்திருக்கிறார் ராகுல் டிராவிட்.

இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் வீரராக மற்றும் துணைக்கேப்டனாக இருந்த அஜிங்கியா ரகானே, கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட் சரியான ஃபார்மில் இல்லை என்று வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

எந்தவித சர்வதேச போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த இவரை பிசிசிஐ தனது ஒப்பந்தத்தில் இருந்து நீக்கி மேலும் பெருத்த அடியை கொடுத்தது. 2023/24 ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து இவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பல்வேறு தடங்கல்கள் மத்தியில், உள்ளூர் போட்டிகளில் அபாரமான செயல்பட்ட இவரை ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணி. சிஎஸ்கே அணியில் இதுவரை காணாத அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

சிறந்த பார்மில் இருக்கும் ரகானேவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் இடம் கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து கண்டிஷனில் ரகானே சிறப்பாக விளையாடக்கூடியவர் என்பதால் இவர் மீது கவனம் திரும்பியுள்ளது.

- Advertisement -

ரகானே மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தது குறித்து தனது சமீபத்திய போட்டியில் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ராபிட் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

“ரகானே அணியில் இருப்பது மகிழ்ச்சி. அணியில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் இந்த அரியவாய்ப்பு ரகானேவிற்கு கிடைத்திருக்கிறது. திறமை வாய்ந்த வீரர். அவரது அனுபவம் இந்திய அணிக்கு பெரும் உதவியாக இருக்கும். வெளிநாட்டு மைதானங்களில் மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறார். குறிப்பாக இங்கிலாந்தில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்.

தற்போது இருக்கும் இந்திய அணியில் மிகச் சிறந்த ஸ்லிப் ஃபீல்டர் ரகானே. இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய அனுபவம் கொண்டவர். வழிநடத்தி தொடரை வெற்றி பெற்றும் கொடுத்திருக்கிறார் என்பதால் இவரது பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து டெஸ்ட் போட்டிக்குள் வருவது என்பது அவ்வளவு எளிதல்ல. இவை முழுமைக்கும் அவரது கடின உழைப்பு காரணம். இங்கிலாந்தில் விளையாடுவதால் ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் விளையாட வைக்கப்பட்டு மீண்டும் வெளியேற்றப்படுவார் என்று எங்கேயும் பொறிக்கப்படவில்லை. நன்றாக விளையாடி அடுத்தடுத்த தொடர்களுக்கு இருப்பார் என்று நம்புகிறேன்.” என ராகிகுல் டிராவிட் பேசினார்.