“நீங்க நினைக்கிற மாதிரி இல்லங்க.. 13 பேருதான் இருக்கோம்.. பல பிரச்சினையால ஆள் இல்ல!” – உண்மையை உடைத்து பேசிய ரோகித் சர்மா!

0
1470
Rohit

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்து உள்ள நிலையில், நாளை மூன்றாவது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறுகிறது!

இந்தப் போட்டிக்கு முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்திப் யாதவ் ஆகியோர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்தத் தொடரை முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்திய அணி கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கடைசிப் போட்டிக்கு முக்கிய வீரர்கள் வருவதால் வென்றாக வேண்டிய அவசியமும் இருக்கிறது.

இந்த நிலையில் நாளைய போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சில விரும்பத் தகாத அதிர்ச்சியான விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

கேப்டன் ரோகித் சர்மா பேசும்பொழுது
“எங்களிடம் நிறைய வீரர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார்கள். சிலர் சொந்த காரணங்களுக்காக வீட்டிற்கு சென்று உள்ளார்கள். சிலர் ஓய்வில் இருக்கிறார்கள். இதனால் தற்போது எங்களிடம் 13 வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். கில், ஹர்திக், சமி அடுத்த ஆட்டத்தில் விளையாட மாட்டார்கள். எங்களிடம் 13 வீரர்கள் மட்டுமே இருப்பதால் அணியில் நிச்சயமற்ற நிலை இருக்கிறது.

- Advertisement -

நாங்கள் கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகள் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுத்தார்கள். பேட்ஸ்மேன்கள் முக்கியமான ரன்களை அடித்தார்கள்.

அஸ்வினுடைய தரம் மற்றும் அனுபவத்தை ஒதுக்கி விட்டு எங்களால் போக முடியாது. மேலும் அவர் அற்புதமான சில வேரியேஷன்களையும் பந்துவீச்சில் காட்டினார். அணியில் பேக்கப் வீரர்கள் முதல் கொண்டு எல்லோரும் சிறப்பாக இருப்பது நல்ல விஷயம்.

உலகக் கோப்பைக்குள் நம்பர் 1 அணியாக நுழைவது சாதகமான ஒன்று. ஆனால் நாள் முடிவில் அது ஒரு பொருட்டு கிடையாது. நாம் தற்போது தங்கி நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும். தரவரிசை பற்றி யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை. இந்தக் கட்டத்தில் நாங்கள் கவலைப்பட வேறு பெரிய விஷயங்கள் இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!