ஸ்மித், ஹெட் இல்லை… ஆஸ்திரேலிய அணியில் நான் இவரை தான் நம்பினேன்; எனக்கு பிடித்த ஆஸி.,வீரரும் இவர் தான் – பாட் கம்மின்ஸ் பேட்டி!

0
490

ஸ்மித், ஹெட் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் இவரை தான் நான் நம்பினேன் என கோப்பையை வென்றபின் பேட்டியளித்தார் பாட் கம்மின்ஸ்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் முதல்முறையாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலில் விளையாடிய இந்திய அணியை வீழ்த்தி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்றது.

- Advertisement -

ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. பைனலில் முதல் இன்னிங்கில் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் ஜோடி சேர்ந்து கிட்டத்தட்ட 300 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியது. முதல் இன்னிங்கில் 163 ரன்கள் விளாசிய ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கோப்பையை பெறும்பொழுது பேசிய ஆஸி., அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில், “ஆரம்பத்தில் டாஸ் இழந்திருந்தாலும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு முன்னிலை பெற்றோம். ஏனெனில் நாங்களும் பவுலிங் செய்யலாம் என்ற முடிவில் இருந்தோம். அதன் பிறகு ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தது எங்களை நல்ல நிலைக்கு கொண்டு சென்றது.

2 வருடங்களுக்கு முன் ஆஷஸ் தொடரில் துவங்கி, தற்போது வரை ஆஸ்திரேலியா அணிக்கு ஹெட் செயல்பட்ட விதம் சிறப்பாக இருந்திருக்கிறது. பவுலர்களுக்கு அழுத்தம் கொடுத்து அதிக ரன்களை அடிக்கிறார். அதன் பிறகு பவுலர்கள் ரன்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர். விக்கெட்டுகளை எடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. அப்போதே அணியை முன்னிலைப்படுத்தி விடுகிறார்.

- Advertisement -

இந்த பைனலில் முதல் நாளே ஆட்டத்தில் முன்னிலை பெற்றுவிட்டோம். அதன் பிறகு நடுவில் எங்களுக்கு சரியாக அமையாததால் இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது போல ஆகிவிட்டது. பின்னர் போலண்ட் விராட் கோலி விக்கட்டை எடுத்தது எங்களை மீண்டும் முன்னிலைக்கு கொண்டுவந்தது.

போலண்ட் எனக்கு பிடித்தமான வீரராக மாறிவிட்டார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு ஈர்க்கிறார். நான் அணியில் அவரை மிகவும் நம்பியிருந்தேன். அவருக்கு குறைந்த வாய்ப்புகளே கிடைத்திருந்தாலும் அவை அனைத்திலும் தாக்கம் ஏற்படுத்திவிடுகிறார். ஆஷஸ் தொடரிலும் இதை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட் தான் இப்போது இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு பிடித்தமான ஃபார்மட். டெஸ்ட் கிரிக்கெட் உங்களுக்கு அனைத்து விதமான போட்டி மற்றும் திறமைகளை டெஸ்ட் செய்கிறது.” என்றார்.