“சொன்னா போதாது.. ரோகித் சர்மாவ பார்த்து கத்துக்கனும்!” – பாபர் அசாம் பக்கம் பாய்ந்த சோயப் அக்தர்!

0
2078
Rohit

நடப்பு உலகக்கோப்பை தொடரில் சில அணிகளை இங்கிலாந்து அணி காப்பாற்றி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். குறிப்பாக இங்கிலாந்து பாகிஸ்தான் அணியை காப்பாற்றியிருக்கிறது.

எப்படி என்றால் நடப்பு சாம்பியனாக, அணியில் உள்ள வீரர்களின் பெயர்களை மொத்தமாக பார்த்தாலே எதிரணி தன்னம்பிக்கையை இழக்கும் விதத்தில் இருந்த இங்கிலாந்து அணி, விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளை தோற்று இருக்கிறது.

- Advertisement -

யாரும் எதிர்பார்க்காத வகையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியே இந்த அளவிற்கு மோசமாக செயல்பட்டு இருக்கின்ற காரணத்தினால், மற்ற மோசமாக செயல்பட்ட அணிகள் இதன் மூலம் கொஞ்சம் காப்பாற்றப்பட்டு இருக்கின்றன.

இந்த வகையில் பாகிஸ்தான் அணி கொஞ்சம் தப்பி இருக்கிறது. பாகிஸ்தான அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்று நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்கிறது.

முதலில் நியூசிலாந்து அதற்கடுத்து இலங்கை ஆகிய அணிகளைத் தவிர மோதிய பெரிய அணிகளுடன் தோற்றது. அதில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் தோல்வி அடைந்தது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங் நடப்பு உலக கோப்பை தொடரில் மிகுந்த ஏமாற்றத்தை கொடுப்பதாக அமைந்திருக்கிறது. அவர் சில அரை சதங்கள் அடித்தாலும் கூட அது அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இல்லை.

மேலும் சில நாட்களுக்கு முன்பு பேசி இருந்த பாபர் அசாம், தனக்குப் பிடித்த வீரர்களாக விராட் கோலி, ரோஹித் சர்மா, கேன் வில்லியம்சன் மூன்று பேர் பெயரையும் கூறியிருந்தார். மேலும் அணி இக்கட்டான நிலைமையில் இருக்கும் பொழுது இவர்கள் எப்படி விளையாடி காப்பாற்றுகிறார்கள் என்பதை, இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

தற்பொழுது இது குறித்து கருத்து சொல்லி உள்ள பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் வேகப் பந்துவீச்சாளர் சோயப் பக்தர் கூறும் பொழுது ” எனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன் ரோகித் சர்மாதான். பாபர் அசாம் அவரைப் பார்த்து நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!