பேட்டிங்கை விட அது ரொம்ப கஷ்டம்.. எனக்கு போதுமான கிரெடிட் தரல.. சாதனை சதத்திற்கு பின் கே எல் ராகுல் பேட்டி.!

0
22865

உலகக்கோப்பை தொடரின் 45 வது மற்றும் இறுதி லீக் ஆட்டம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஆன கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடியான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

முதலாவது விக்கெட்டுக்கு ஜோடியாக இவர்கள் இருவரும் பனிரெண்டு ஓவர்களில் நூறு ரன்கள் சேர்த்து நிலையில் 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த கில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து விராட் கோலி ரோஹித்துடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிவந்த கேப்டன் ரோகித் சர்மா 54 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறப்பாக விளையாடி மூன்றாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்து நிலையில் 56 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த விராட் கோலி அவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து கேஎல் ராகுல் ஸ்ரேயாசுடன் இணைந்தார்.

- Advertisement -

இந்த ஜோடி மிகவும் அதிரடியாக ஆடி நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர். இருவரும் அரை சதம் கடந்ததோடு இறுதி ஓவர்களில் நெதர்லாந்து பந்துவீச்சாளர்களை சிக்ஸர்களும் பௌண்டரிகளும் ஆக விரட்டி கலங்கடித்தனர். நான்காவது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு இந்த ஜோடி 208 ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயாஸ் ஐயர் உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடி 94 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

அவருடன் அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் 64 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் கேஎல் ராகுல் உலகக்கோப்பை வரலாற்றில் விரைவாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இவர்களின் அதிரடியான ஆட்டத்தால் இந்தியா 50 ஓவர்களில் 410 ரன்கள் நான்கு விக்கெட்டுகள் இழந்திருந்தது. சூரியகுமார் யாதவ் ஒரு பந்தில் இரண்டு ரர்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

முதல் இன்னிங்ஸ் முடிந்த பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய கேஎல் ராகுல் ” கடந்த இரு போட்டிகளில் அதிக நேரம் ஆடுகளத்தில் நின்று விளையாட முடியவில்லை. இந்தப் போட்டியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்யும்போது நம்பிக்கை மிகவும் அவசியம். இந்த ஆட்டத்தை ஒரு சிறந்த போட்டியாக நான் கருதுகிறேன். இறுதி நேரத்தில் சிக்ஸர்கள் அடிப்பது முக்கியமான ஒன்று. அதற்கு தேவையான நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். கடைசி பத்துபவர்களில் அடித்து விளையாட வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இது ஒன்றும் விஞ்ஞான அறிவியல் அல்ல” என்று தெரிவித்தார்

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இறுதி பத்து ஓவர்களில் அதிகமான ரன்களை சேர்க்க வேண்டும் என்று நினைத்தோம் அதுதான் எங்களது திட்டமாகவும் இருந்தது. ஆட்டத்தின் இறுதியில் பந்துகள் மென்மையாகி விடுகிறது. மேலும் பந்துவீச்சாளர்களுக்கு ரிவர்ஸ் ஸ்விங் கிடைக்கிறது. இதனால் சிக்ஸர் அடிப்பது சிரமமாக இருக்கிறது. எனினும் நாங்கள் திட்டத்தை நன்றாக செயல்படுத்தினோம். இந்தப் போட்டியில் வெற்றி பெற்று செமி பைனலை சந்திக்க காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது விக்கெட் கீப்பிங் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் ” விக்கெட் கீப்பிங் செய்வது சிறிது கடினமாக இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய சவால்கள் அதனை விரும்பி செய்ய வைக்கிறது. எப்போதும் ஆட்டத்தில் இருக்கும் ஒரு உணர்வை விக்கெட் கீப்பிங் பணி கொடுக்கிறது. அதனை ரசித்து செய்கிறேன். பந்துவீச்சாளர்கள் டிஆர்எஸ் எடுப்பதற்கு எனக்கு மிகுந்த சவால்களை கொடுக்கின்றனர். எனினும் என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். அதற்கான கிரடிட்டை அவர்கள் எனக்கு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.