“பிரெட்லீ ஜான்சனை சேர்த்து பார்த்த மாதிரி இருக்கு” – முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு ரிக்கி பாண்டிங் பாராட்டு!

0
19576
Ponting

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகும்.

இந்தத் தொடருக்கு இங்கிலாந்து ஆஸ்திரேலியாவைத் தாண்டி பொதுவான கிரிக்கெட் ரசிகர்கள் உலகெங்கிலும் நிறைய இருக்கிறார்கள். இப்போதைய நவீன கிரிக்கெட் காலத்திலும் இந்த டெஸ்ட் தொடரே மற்ற நாடுகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடர்களை விட அதிக முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இங்கிலாந்தில் நடந்து வரும் ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று போட்டிகள் நடைபெற்ற முடிந்துள்ளன. இதில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்று ஆக வேண்டிய அல்லது சமன் செய்தே ஆக வேண்டிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டு வந்து போட்டியை வென்று தற்பொழுது தொடரில் நீடிக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் அதிவேக பந்துவீச்சாளர் மார்க் வுட்.

மார்க் வுட் சராசரியாக மணிக்கு 150 கிலோ மீட்டருக்கு மேல் வேகத்தில் வீசி ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களை அனாயசமாக சாய்த்தார். அவருடைய வேகத்தால் இரண்டு இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலியா அணியின் தகுதிக்கு குறைவான ரண்களில் சுருட்ட முடிந்த காரணத்தினால், இங்கிலாந்து அணி பேட்டிங்கில் போராடி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் லெஜெண்ட் பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங் மார்க் வுட் குறித்து மிகவும் புகழ்ந்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது ” மார்க் வுட்டை பார்க்கும் பொழுது கொஞ்சம் மிட்சல் ஜான்சன், கொஞ்சம் பிரட் லீயை சேர்த்து பார்ப்பது போல இருக்கிறது.

போட்டியின் முதலில் பந்து வீசுவது. அதி வேகமாக பந்து வீசுவது. பேட்ஸ்மேன்களை மிரட்டுவது. பந்தில் வேகத்துடன் கொஞ்சம் ஸ்விங்கையும் பெறுவது. இப்படி அவர் எதிரணியை அடிப்பதற்கான ஒரு முக்கியமான ஆயுதமாக இருக்கிறார்.

மார்க் வுட் ரிதம் மற்றும் அவரது வேகம் மேலும் அவரது சீம் பிரசன்டேஷன், அத்தோடு அவருக்கு கிடைக்கும் பந்தின் அசைவு, அவர் வீசும் முறை என எல்லாமே அந்த நேரத்தில் மிக மிக வேகமாக இருக்கிறது.

உஸ்மான் கவஜாவை அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதை பாருங்கள். மணிக்கு 90 மைல் வேகத்தில் மிடில் லைனில் வந்து வந்து மீண்டும் ஸ்விங் ஆகிறது. இப்படிப்பட்ட பந்துவீச்சாளர்கள் உடல் தகுதியுடன் இருக்கும் பொழுது இவர்களை எதிர்கொண்டு விளையாடுவது மிகவும் கடினமான ஒரு விஷயம்.

அதே சமயத்தில் மார்க் வுட் மிக அதிகமான வேகத்தில் வீசக்கூடியவராக இருக்கின்ற காரணத்தினால், அவரைத் தொடர்ந்து எல்லா போட்டிகளுக்கும் களம் இறக்க முடிவது கடினமான காரியம். அவர் மீதும் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு சேர்த்து கிடைப்பாரா? என்பது சந்தேகம்தான்” என்று கூறியிருக்கிறார்.

மார்க் வுட் 2018 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 1.50 கோடிக்கு வாங்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு அவர் தற்பொழுது லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார்!