“ஒரு பயிற்சியாளரா என் வீரர்களை பார்க்க கஷ்டமா இருக்கு.. ஆனா..!” – டிராவிட் உருக்கமான பேச்சு!

0
7204
Dravid

நேற்று நடைபெற்ற 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பத்தில் மிகச் சிறப்பாக ஆரம்பித்தது. கேப்டன் ரோஹித் சர்மா வழக்கம் போல் அதிரடியான தாக்குதலை தொடுத்து ரன்களை மிக வேகமாக கொண்டு வந்தார்.

- Advertisement -

ஆனால் ஒரே ஒரு ஷாட்டில் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போக எல்லாமே தலைகீழாக மாறியது. மேலும் ஆடுகளம் இரண்டாவது பேட்டிங் செய்வதற்கு வசதியாக இருந்தது. இதுவெல்லாம் சேர்ந்து இந்திய அணிக்கு நேற்று பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.

நேற்று தோல்வி அடைந்ததும் இந்திய வீரர்கள் மைதானத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக காணப்பட்டார்கள். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முகமது சிராஜ் மைதானத்திலேயே அழுதார்கள். பார்ப்பதற்கு மிகவும் கடினமான ஒன்றாக அது இருந்தது.

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும் பொழுது ” ரோகித் சர்மா பேட்டிங் அபாரம் ஆனது. அவர் சிறப்பான தொனியை அமைக்க எப்பொழுதும் முயற்சி செய்தார். நாங்கள் ஒரு குறிப்பிட்ட அதிரடியான வழியில் விளையாட வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.
நாங்கள் ஒரு நேர்மையான தாக்குதல் பிராண்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறோம்.

- Advertisement -

அவர் முன்னுதாரணமாக இருந்து அணியை வழிநடத்த விரும்பினார். அவர் அதைச் செய்வதில் சிறப்பாகவும் இருந்தார். ஒரு நபராகவும் தலைவராகவும் அவரைப் பற்றி என்னால் எந்தவிதமான குறைகளையும் சொல்ல முடியாது.

நேர்மையாக சொல்வது என்னவென்றால் பனி நிறைய வந்தது என்பது கிடையாது. ஆனால் இரண்டாவது பகுதியில் பேட்டிங் செய்யும்பொழுது பந்து விளையாடுவதற்கு நன்றாக பேட்டுக்கு வந்தது.

எங்களால் பௌண்டரிகள் அடிக்க முடியவில்லை நாங்கள் ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்தோம். எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் நிறைய உணர்ச்சிகள் இருந்தது. ஒரு பயிற்சியாளராக அணியின் வீரர்களை பார்க்க கடினமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தார்கள் என்ன தியாகம் செய்தார்கள் என்று எனக்குத் தெரியும்.

இதுதான் விளையாட்டு இது நடக்கும். அன்றைய நாளின் சிறந்த அணி வெற்றி பெற்றது. நாளையில் இருந்து புதியதாக ஒன்றை நாங்கள் கற்றுக் கொள்வோம். மாற்றி சிந்தித்து முன்னேறி வருவோம்!” என்று கூறியிருக்கிறார்!