“வெற்றியோடு அடுத்த போட்டிக்கு வறோம். எங்க ஹோம்ல நடக்குது!” – சிஎஸ்கே அணிக்கு ஹிண்ட் கொடுத்த வார்னர்!

0
2345

எங்களுடைய சொந்த மைதானத்தில் சில போட்டிகள் சரியாக அமையவில்லை. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் நம்பிக்கையோடு அடுத்த போட்டியில் இறங்குவோம் என்று சிஎஸ்கே போட்டி குறித்து பேசினார் டேவிட் வார்னர்.

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏற்கனவே பிளே-ஆப் வாய்ப்பு இழந்துவிட்டது. இருப்பினும் கடைசி இரண்டு லீக் போட்டிகளை வெற்றியுடன் முடிப்போம் என்கிற நம்பிக்கையோடு இந்த போட்டியில் களமிறங்கி அதிரடியாக முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

பிரித்வி ஷா 54 ரன்கள், டேவிட் வார்னர் 46 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் அமைத்துக்கொடுத்து கையோடு அவுட்டாகினர். 37 பந்துகளில் 82 ரன்கள் விளாசிய ரயிலி ருஸ்சோவ் மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். இறுதியில் 213 ரன்கள் அடித்தது டெல்லி அணி.

இந்த இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. மிடில் ஆர்டரில் அதர்வா 55 ரன்கள் அடித்து வெளியேறினார். கடைசிவரை போராடிய லிவிங்ஸ்டன் 94 ரன்கள் விளாசினார். பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 198 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. கடைசியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த டேவிட் வார்னர் கூறுகையில், “படுமோசமாக ஃபீல்டிங் செய்தோம். இருப்பினும் எங்களுடைய பலம் என்னவென்று புரிந்து மீண்டும் ஆட்டத்திற்குள் வந்துவிட்டோம். இந்த பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருந்தது.

- Advertisement -

துவக்கத்தில் பிரித்வி ஷா ஏற்படுத்திய தாக்கம் மிக முக்கியமானதாக அமைந்தது. ரயிலி ரூஸோவ் கடைசியில் முடித்துக் கொடுத்த விதமும் ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்தது.

எங்களுடைய சொந்த மைதானத்தில் முன்னும்பின்னுமாக செயல்பட்டதால் தோல்விகளை சந்தித்தோம். ஒரு போட்டியில் சிறப்பாக ஆட்டிவிட்டு, அடுத்த போட்டியே மோசமாக ஆடியதால் டெல்லியில் வெற்றிபெற முடியவில்லை. இப்போது வெற்றிபெற்ற நம்பிக்கையுடன் அடுத்த போட்டிக்கு வருகிறோம். சொந்த மைதானம் என்பதால் வெற்றி பெறுவதற்கு கூடுதல் வாய்ப்புகள் இருக்கின்றன. இன்று 2 புள்ளிகள் பெற்றது மகிழ்ச்சி!” என்று சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டி குறித்தும் வார்னர் பேசினார்.