“இந்த வீரர் ஐந்தாவது இடத்தில் ஆடுவது அணிக்கு நல்ல விஷயம்தான்” – இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர்!

0
684

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஒன்பதாம் தேதி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது . இதற்காக இரண்டு அணியினரும் தீவிரமான பயிற்சிகள் ஈடுபட்டு வருகின்றனர் .

இரண்டு அணிகளுக்குமே இந்த டெஸ்ட் தொடர் உலக கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் யாருடைய ஆதிக்கம் தொடங்கப் போகிறது என்பதை நிர்ணயிக்கும் ஒரு போட்டியாகவே பார்க்கின்றனர் . மேலும் இந்திய அணியை பொறுத்தவரை இந்தத் தொடரின் வெற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பினை உறுதி செய்யும் .

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி கடந்து மூன்று டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி இடம் தோல்விகளை சந்தித்து இருக்கிறது . மேலும் இந்திய அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. இதனால் இந்த முறை இந்திய அணியை வீழ்த்த திட்டங்களுடன் களம் காண இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

இந்திய அணி பலமாக இருந்தாலும் பும்ராவின் காயம் இந்தியாவுக்கு பின்னடைவாக இருந்திருக்கிறது . இந்நிலையில் சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் நன்றாக ஆடி வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகி இருப்பது மற்றொரு பின்னடைவாக அமைந்திருக்கிறது . மேலும் சூரியகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது .

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனுமான எம்எஸ்கே பிரசாத் சுப்மன் கில் தொடர்ந்து துவக்காட்டக்காரராகத்தான் களம் இறங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் . இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேசிய அவர் ” கில்லை மிடில் ஆர்டரில் களம் இறக்குவார்கள் என்று நான் நினைக்கவில்லை . கே எல் ராகுல் ஐந்தாவது இடத்தில் களமிறங்கலாம் . அவர் ஒரு நாள் போட்டிகளில் அந்த இடத்தில் சிறப்பாக ஆடி வருவதால் அதனை நான் பொருட்படுத்தவில்லை. மேலும் சூரியகுமார் யாதவ் அறிமுக வீரராக களமிறங்க வாய்ப்புகள் இருப்பதை நான் பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தேர்வு குறித்து பேசிய அவர்” பரத் தான் இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பராக இருப்பார்”என்று தெரிவித்தார். இதற்காக ரிசப் பண்ட் அணியில் இருக்கும் போதே பரத்திற்கு பயிற்சி கொடுத்து இந்திய அணி தயார் நிலையில் வைத்திருக்கிறது . இந்த பொறுப்பிற்கு தயாராகவே இருக்கிறார். தனக்கு கிடைக்கும் வாய்ப்பை நிச்சயமாக சரியாக பயன்படுத்துவார்”என்று தெரிவித்தார் ..

மேலும் சுப்மன் தற்போது இருக்கும் பார்மிற்கு அவரை துவக்க வீரராக களம் இறக்க தான் இந்திய அணியின் நிர்வாகமும் விரும்பும். நல்ல ஃபார்மில் இருக்கும் ஒரு வீரரை அவரது டேட்டிங் பொசிஷனில் இருந்து மாற்றியாக இந்தியா அணியும் அவரிடம் கேட்காதே என்று தான் நம்புவதாக தெரிவித்து இருக்கிறார்.