“வலிக்காமல் இல்லை வலிக்கவே செய்கிறது” – ரிஷப் பண்ட் பேச்சு!

0
103
Rishab pant

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகளோடு இந்திய அணி தோற்று முதல் சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி அளித்தது. அந்தத் தோல்வி இந்திய கிரிக்கெட்டில் திடீரென ஒரு மிகப்பெரிய சூறாவளியை கிளப்பிவிட்டது.

அந்த உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு உடனடியாக ரோகித்சர்மா மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரிக்கு அந்த உலகக் கோப்பை தான் கடைசி தொடராகவும் அமைந்தது அதற்கு அடுத்து ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்தார்.

- Advertisement -

இவர்கள் இருவரும் பொறுப்பேற்றுக் கொண்ட பின் இந்திய அணி புது பாய்ச்சலில் புது அணி கலாச்சாரத்தில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணி ஆடுவதற்கு ஒரு அணியை தயார் செய்வதோடு எதிர்கால இந்திய அணியையும் அவர்கள் தயார் செய்து கொண்டு வருகிறார்கள். இதற்காக பல வீரர்களுக்கு வாய்ப்பு தருவதோடு, அவர்களை பல இடங்களில் பயன்படுத்தி பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்து வருகிறார்கள்.

நேற்று துவங்கியிருக்கும் ஆசிய கோப்பை தொடர் இந்த கூட்டணியின் பரிசோதனை முயற்சிகள் எந்த அளவிற்கு பலன் தரக்கூடியது என்பதை பரிசோதித்து பார்க்கும் ஒரு களமாக அமைகிறது. போட்டிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை விட அறைக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவத்தைத் தந்து அதை சரிசெய்ய இந்த கூட்டணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த வகையில் இந்தக் கூட்டணியின் நம்பிக்கைக்குரிய வீரராக ரிஷப் பண்ட் இருந்துவருகிறார். இப்பொழுது அமைந்துள்ள இந்திய அணியில் இவருக்கான இடம் என்பது உறுதி. ஆனால் எந்த இடத்தில் இறக்கப்படுவார் என்பது குறித்து எந்தத் தெளிவும் வெளியில் இருப்பவர்களுக்கு கிடையாது.

- Advertisement -

ரிஷப் பண்ட்டை பொறுத்தவரை அவரது பேட்டிங் என்பது ஏற்ற இறக்கங்களை கொண்டதாகவே இருக்கிறது. ஒரு போட்டியில் சதம் அடித்தால் மற்ற மூன்று போட்டிகளில் அனாவசியமான முறையில் ஆடி ஆட்டம் இழப்பதை அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனால் அவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகவில்லை. மாறாக பெரிய விமர்சனக்கூட்டம் தான் உருவாகி இருக்கிறது. இதை அவரும் உணர்ந்தே இருக்கிறார்.

இதுபற்றி ரிஷப் பண்ட் கூறும் பொழுது ” நான் ஒரு இன்னிங்சில் சதம் அடித்து மறு இன்னிங்சில் மலிவான முறையில் ஆட்டமிழந்தார் என்னை நோக்கி கடுமையான விமர்சனங்கள் இருக்கும் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதற்கு நான் பழகியும் விட்டேன். நான் வெளியே வரும் பொழுது என்னை நோக்கி வரும் விமர்சனங்கள் அசிங்கமாக இருக்கலாம். அவைகள் என்னை பாதிக்காது என்று நான் பொய் சொல்ல மாட்டேன். ஆனால் நான் அதிக ஆபத்துள்ள ஆட்டத்தில் அதிக வெகுமதி உள்ள ஆட்டத்தில் விளையாடுகிறேன் என்ற புரிதல் எனக்கு இருக்கிறது. இந்த உண்மையை நான் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன் ” என்று பக்குவப்பட்ட தனது பேச்சை வெளிப்படுத்தியிருக்கிறார்!