“92 வருடம் கழித்து மீண்டும் மோசம்.. 2 நாள் மட்டும் நடந்தா அது டெஸ்ட்டா?” – ஸ்டெயின் காட்டம்!

0
1104
Steyn

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே தென் ஆப்பிரிக்க கேப்டன் மைதானத்தில் நடைபெற்ற முடிந்த டெஸ்ட் போட்டி பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

குறிப்பிட்ட இந்த டெஸ்ட் போட்டி மொத்தம் 107 ஓவர் மட்டுமே நடைபெற்று இருக்கிறது. நேற்று முதல் நாள் தொடங்கி இன்று இரண்டாவது நாள் உணவு இடைவேளைக்குப் பிறகு மேற்கொண்டு 12 ஓவர்களில் போட்டி முடிந்து விட்டது.

- Advertisement -

நேற்றைய முதல் நாளில் மட்டும் 23 விக்கெட்டுகள் விழுந்தது. மேலும் தென் ஆப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. அதாவது முதல் நாளிலேயே மொத்தம் மூன்று இன்னிங்ஸ் நடைபெற்றது.

இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்த்து மொத்தமாக 642 பந்துகள் மட்டுமே வீசி இருக்கிறார்கள். இதன் மூலம் 92 ஆண்டுகளுக்கு முன்னால் 1932 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 656 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட டெஸ்ட் போட்டியின் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்க்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய அளவில் ஆதரவு குறைந்து வருகின்ற காரணத்தினால், டெஸ்ட் போட்டியை சுவாரசியப்படுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் எல்லா டெஸ்ட் போட்டிகளுக்கும் முடிவு தெரிகின்ற வகையில் ஆடுகளங்களை அமைப்பது என ஐசிசி செயல்படுகிறது.

- Advertisement -

இது ஒரு வகையில் கிரிக்கெட்டை காப்பாற்றும் முயற்சி என்றாலும் கூட, முடிவு தெரிய வேண்டும் என்பதற்காக அமைக்கப்படும் ஆடுகளங்கள், குறைந்தது போட்டியை நான்காவது நாளுக்காவது கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் முடிவது கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது.

டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரையில் ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருவருக்கும் பொதுவானதாகவும், இருவருக்கும் சில சவால்களை கொடுக்கக் கூடியதாகவும் இருந்தால்தான், ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும். ஆனால் நடப்பவைகள் எதுவும் அப்படி இல்லை.

இந்த நிலையில் தென் ஆப்ரிக்க முன்னாள் லெஜென்ட் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் கூறும் பொழுது “நாம் ஏன் ஆடுகளத்தில் விரிசல்கள் இருந்தால் மிகவும் பயப்படுகிறோம்? சிட்னி மற்றும் பெர்த் மைதானங்களை நினைத்துப் பாருங்கள். அங்கு ஆடுகளத்தில் இருக்கும் விரிசலில் ஒரு காரையே நிறுத்தி வைக்க முடியும்.

ஆனாலும் அப்படியான மைதானத்தில் கூட டெஸ்ட் போட்டிகள் நான்காவது நாள் மற்றும் ஐந்தாவது நாட்களுக்கு செல்கின்றன. ஆனால் இங்கு ஆடுகளத்தில் எந்த விரிசலும் இல்லை. இருந்தும் கூட போட்டி இரண்டாவது நாளில் முடிந்து விட்டது. ஆடுகளங்கள் நாளுக்கு நாள் மோசமாகிறது. நிச்சயமாக இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறுகிற போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட் கிடையாது!” என்று காட்டமாகத் தெரிவித்து இருக்கிறார்!