என் ஜெர்சி நம்பர் 18க்கும் எனக்கும் முன் ஜென்ம தொடர்பு இருக்கிறது போல; என் வாழ்க்கையில் இதெல்லாம் 18ஆம் தேதியில் நடந்திருக்கிறது – விராட் கோலி வெளியிட்ட ஆச்சரியமான தகவல்கள்!

0
143
Viratkohli

உலகக் கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்து மிகப்பெரிய ஆதிக்கத்தை சர்வதேச போட்டிகளில் செய்து வருபவர் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி!

ஒட்டுமொத்த சர்வதேச ரன்கள் மற்றும் ஒட்டுமொத்த சர்வதேச சதங்கள் என்று சச்சினுக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி தொடர்ந்து இருந்து வருகிறார்.

- Advertisement -

மேலும் சச்சினின் 100 சர்வதேச சதங்கள் என்கின்ற மிகப்பெரிய சாதனையை முறியடிக்க கூடிய வாய்ப்பு இருக்கின்ற ஒரு வீரராக விராட் கோலி கிரிக்கெட் உலகில் பார்க்கப்படுகிறார்.

விராட் கோலி 18 என்ற எண் கொண்ட ஜெர்சியை இந்திய அணிக்காக மற்றும் ஐபிஎல் பெங்களூர் அணிக்காக பயன்படுத்தி விளையாடுகிறார்.

அவர் பயன்படுத்தும் 18 என்ற எண் கொண்ட ஜெர்சி இன்று இந்தியாவில் அதிக இளைஞர்களால் பயன்படுத்தப்படுகின்ற ஜெர்சி எண்ணாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்பொழுது தனது ஜெஸ்ஸியின் 18 நம்பர் குறித்து விராட் கோலி ஆச்சரியப்படத்தக்க தகவல்களை கூறி இருக்கிறார்.

இதுகுறித்து விராட் கோலி கூறும் பொழுது ” இந்த என்னுடன் எனக்கு ஒரு பிரபஞ்ச தொடர்பு இருக்க வேண்டும். இந்த எண் கொண்ட ஜெர்சியை நிறைய பேர் பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது உண்மையாகவே எனக்கு சர்ரியலாக இருக்கிறது.

இது சர்ரியல்தான். ஏனென்றால் நான் இந்த நிலையில் இருப்பேன் என்று எப்பொழுதும் நினைத்துப் பார்த்ததே கிடையாது. நான் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் எனது ஹீரோவின் ஜெர்சியைதான் அணிய விரும்பினேன்.

உண்மையைச் சொல்வது என்றால் 18ம் எண் கொண்ட ஜெர்சி என்பது எனக்கு அண்டர் 19 துவக்கத்தின் போது தரப்பட்டது. ஆனால் நான் அந்த எண்ணை ஒருபோதும் கேட்கவில்லை

ஆனால் பின்னர் அந்த எண் என் வாழ்க்கையில் மிகவும் ஒரு முக்கியமான எண்ணாக மாறி இருக்கிறது. 2008 ஆகஸ்ட் 18 இந்திய அணிக்காக அறிமுகமானேன். 2006 டிசம்பர் 18 என் தந்தை இறந்தார். என் வாழ்வின் மிக முக்கியமான இரண்டு நிகழ்வுகள் 18ஆம் தேதியில் தான் நடந்தது!” என்று கூறியிருக்கிறார்!