“நாங்க தோத்தது அவமானம்.. ஆனா இலங்கை இந்தியாவை அடிக்கும்.. முடியாதுனு நினைக்காதிங்க!” – சோயப் அக்தர் பரபரப்பு பேச்சு!

0
9819
Akthar

16ஆவது ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் முதல் சுற்றில் இரண்டு போட்டிகளையும் வென்று இரண்டாவது சுற்றுக்கு வந்த அணியாக இலங்கை மட்டுமே இருக்கிறது.

- Advertisement -

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி முதல் சுற்றில் வெற்றி தோல்வி இல்லாமல் டிரா ஆகி இருந்தது. அதேபோல் பங்களாதேஷ் அணி இலங்கை அணி இடம் தோல்வி அடைந்து இரண்டாவது சுற்றுக்கு வந்தது.

மேலும் இரண்டாவது சுற்றில் இருந்து இறுதிப் போட்டிக்கு வந்துள்ள இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இரண்டுமே இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளன. இலங்கை இந்தியாவிடமும், இந்தியா பங்களாதேஷ் இடமும் தோல்வியடைந்து இருக்கின்றன.

இரண்டாவது சுற்றில் வாழ்வா? சாவா? போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோதிய இலங்கை அணி, 42 ஓவர்களில் 252 ரன்கள் என்கின்ற கடினமான இலக்கை துரத்தி அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் முதல் சுற்றிலும் வாழ்வா? சாவா? நிலையில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இருந்தது. இதனால் இலங்கை அணியின் நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. மேலும் அவர்களுக்கு உள்நாட்டு சாதகமும் இருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறும் பொழுது “வங்கதேசம் போன்ற அணியிடம் இந்தியா தோற்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் அதைச் செய்தார்கள். இது ஒரு சங்கட்டமான தோல்வி. பாகிஸ்தான் இலங்கையிடம் தோற்றது. ஆசியக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது இன்னும் அவமானம்.

இந்தியா இன்னும் தொடரில் இருக்கிறது. அவர்கள் சிறப்பாக திரும்பி வந்து கோப்பையை வெல்ல ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. இது இந்திய அணிக்கு ஒரு விழிப்புணர்வு. ஆனால் அவர்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும். சுலபமாக வெல்ல முடியாது. இது கடினமான போட்டியாக இருக்கும்.

இலங்கை அணி இந்தியாவை வீழ்த்த முடியும். மேலும் உலகக் கோப்பை எனும் பொழுது போட்டி யாருடையதாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தியா விழித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் பங்களாதேஷ் அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!