“எனது ஹீரோவின் சாதனையை சமன் செய்தது பெரிய மகிழ்ச்சி.. நான் வந்த இடம் தெரியும்!” – விராட் கோலி உருக்கமான பேச்சு!

0
1883
Virat

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து கிடைத்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய அணியும் சேர்ந்து அந்த விருந்தை ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறது.

மிகக் குறிப்பாக விராட் கோலி தன்னுடைய 49வது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை எடுத்து, ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் டாஸ் வென்று இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மிக வேகமாக ஆட்டத்தை துவங்கினார்கள். ஆனால் பவர்பிளே முடிந்து சுழற் பந்துவீச்சாளர்கள் வந்த பிறகுதான் ஆடுகளம் அவ்வளவு எளிதானது அல்ல என்பது புரிந்தது.

இதற்கு அடுத்து விராட் கோலி ஆட்டத்தை மெதுவாக்கி ஸ்ரேயாஸ் ஐயரை வழிநடத்தி, இந்திய அணியை நல்ல ஸ்கோருக்கு கொண்டு சென்றதுடன் தானும் சதம் அடித்து அசத்தினார்.

இன்று 35 ஆவது பிறந்தநாள் காணும் வேளையில் அவருக்கு உலக கிரிக்கெட்டின் ஹீரோ சச்சின் சதசாதனையை சமன் செய்யும் வாய்ப்பும் கிடைத்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கிறது. இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவரே தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது பெற்று விராட் கோலி பேசும் பொழுது “இன்று நடைபெற்றது மிகவும் பெரிய ஒரு போட்டி. இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஒரு அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்பதால் ஒரு தனி உந்துதல் இருந்தது. எனது பிறந்தநாளில் மக்கள் இதை இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக மாற்றினார்கள். எனக்கு அது இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக அமைந்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் மிக வேகமாக இன்னிங்ஸை அமைப்பதைப் பார்த்து அப்படியே பேட்டிங்கை இங்கு தொடர முடியாது. ஏனென்றால் ஆடுகளம் பவர்பிளே முடிந்து வேறு மாதிரியாக இருந்தது. பந்து பழையதானதும் நிலைமைகள் மாறுகின்றன.

நான் நிலைத்து நின்று கடைசி வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்று அணி நிர்வாகத்திடம் இருந்து செய்தி வந்தது. அணி நிர்வாகத்தின் அந்தக் கண்ணோட்டத்தில் நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

நாங்கள் 315 ரன்கள் இருக்கும்பொழுது, நாங்கள் நல்ல நிலையில் இருப்பதை உணர்ந்தோம். நான் திரும்ப வந்து நன்றாக கிரிக்கெட் விளையாடுவதும், அணியின் வெற்றிக்கு பங்களிப்பதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

சச்சின் அவர்களின் எனக்கான வாழ்த்து செய்தி மிகப் பெரியது. எனது ஹீரோவின் சாதனையை சமன் செய்வது மிகப்பெரிய கௌரவம். பேட்டிங் பர்ஃபெக்க்ஷன் என்றால் அது அவர்தான்.

நான் வந்த இடம் தெரியும். நான் அவரை டிவியில் பார்த்த நாட்கள் எனக்கு நன்றாகத் தெரியும். இது ஒரு உணர்ச்சிகரமான தருணம். அவரிடமிருந்து பாராட்டை பெற்றது மிகவும் அர்த்தமுள்ள ஒன்று!” என்று கூறியிருக்கிறார்!