“இது கொஞ்சம் அவமானகரமானது.. இந்தியாவுக்கு அவர் மட்டும்தான் இருப்பார்!” – 99 WC ஹீரோ லான்ஸ் குளூஸ்னர் பேச்சு!

0
1156
ICT

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையை யாராலும் மறக்கவே முடியாது.

அந்த உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணியாக கருதப்பட்ட அணி தென் ஆப்பிரிக்கா. அந்த அணி மொத்தமாக நட்சத்திர வீரர்களாலும், பல்வேறு திறமை கொண்ட வீரர்களாலும் நிரம்பி இருந்தது.

- Advertisement -

அந்தக் காலக்கட்டத்தில் பவர் ஹிட்டிங் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தென் ஆப்பிரிக்காவின் லான்ஸ் குளூஸ்னர் உலக கிரிக்கெட்டில் கவர்ச்சிகரமான கதாநாயகனாக இருந்தார்.

அவர் களத்தில் நின்றால் எதையும் மாற்றுவார் என்று சொந்த அணியின் ரசிகர்கள் நம்பும் படியும், எதிர் அணிகளின் ரசிகர்கள் அச்சப்படும்படியும் விளையாடி வந்தவர்.

குறிப்பிட்ட அந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் கடைசி விக்கெட்டுக்கு ஒரு ரன் தேவை எனும் பொழுது, கைவசம் ஒரு விக்கெட் இருக்க, ஆலன் டொனால்ட் அவசரப்பட்டு ரன் ஓடி ரன் அவுட் ஆக, லான்ஸ் குளூஸ்னர் கிரிக்கெட்டையே வெறுக்கும்படி ஆனது.

- Advertisement -

தற்பொழுது நடக்க உள்ள உலகக் கோப்பை குறித்து பேசி உள்ள அவர் முதலில் விராட் கோலி குறித்து கூறும் பொழுது ” விராட் கோலி ஓய்வு பெறுவாரா? கிடையாது. அவர் முற்றிலும் தரமானவர். அவர் தனது சொந்த சூழ்நிலையில் விளையாடுவார். அவர் இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாடினால் அதிக ரன்கள் குவித்த வீரராக இருப்பார்.

ஆஸ்திரேலியாவுக்கு ஒரு தரமான சுழற் பந்துவீச்சாளர் தற்பொழுது இல்லை. எனவே அவர்கள் அந்த இடத்தில் ஒரு நல்ல வேகப்பந்துவீச்சாளரை தேர்ந்தெடுப்பது நல்லது. அதேசமயத்தில் அவர்களிடம் சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லையென்றாலும் கூட, தென் ஆப்பிரிக்காவில் மெதுவான வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து சிறப்பாக செயல்பட்டார்கள். உலகக்கோப்பையில் அவர்கள் முழு வேகத்தில் வருவார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பையில் இல்லாதது சற்று வித்தியாசமானது. மேலும் அவர்கள் தகுதி சுற்றில் தோற்று வெளியேறியது கொஞ்சம் அவமானகரமானது. எந்த உலகக் கோப்பையிலும் அவர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு விஷயம்!” என்று கூறியிருக்கிறார்!